முடிந்தால் ஆட்சியைக் கவிழ்த்துப் பார்க்கட்டும் - தமிழக முதலமைச்சர்

செப்டம்பர் 13, 2017

முடிந்தால் ஆட்சியைக் கவிழ்த்துப் பார்க்கட்டும் என டிடிவி தினகரனுக்கும் , ஸ்டாலினுக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விடுத்துள்ளார்.

ஜெயலலிதா இல்லாத நிலையில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுக்குழுக்கூட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்காதது, கிடைத்த முதல் வெற்றியெனவும் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இனி, யார் நினைத்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை அழிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

துரோக குற்றச்சாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்ட தினகரன், தம்மை துரோகிகள் என சாடுவது வேடிக்கைக்குரியது எனவும் தினகரன் கூறியுள்ளார்.

ஆட்சியைக் கவிழ்ப்பேன் எனக்கூறும் தினகரன் முடிந்தால் கலைத்து பார்க்கட்டும் எனவும் பழனிச்சாமி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

திமுக வில் தலைவராக முடியாத ஸ்டாலின் ஆட்சியைக் கலைக்க முயல்வது வேடிக்கையானது எனவும் பொதுக்குழுக்கூட்டத்தில் பழனிச்சாமி கூறியுள்ளார்.

செய்திகள்
புதன் யூலை 18, 2018

காவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!