மீன் வாடிக்குள் அகழ்வு பணி!

August 13, 2017

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை 4ஆம் வட்டார கடற்கரை பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வாடி ஒன்றினுள், மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று முன்தினம்  (11) அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பேசாலை 4ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வாடி ஒன்றினுள் இனம் தெரியாத பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார்  காவல் துறை  நிலைய  குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை தொடர்ந்து காவல் துறையினர்  குறித்த பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், குறித்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் கடந்த 8ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதற்கமைய, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குறித்த பகுதியில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (11)   பிற்பகல் 1 மணியளவில், குறித்த பகுதியில், மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதலில் குறித்த மீன் வாடி முழுமையாக அகற்றப்பட்ட நிலையில், மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில், பெக்கொ இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வு பணிகள் ஆராம்பமாகின.

எனினும், குறித்த அகழ்வின் போது ஒரு சில உலோகப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்ட போதும்,எவ்விதமான மர்மப்பொருட்களும் கண்டு பிடிக்கப்படாத நிலையில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டன.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மன்னார் காவல் துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள்
செவ்வாய் August 22, 2017

காணாமற்போனோர் தொடர்பாகவும் அவரிடம் பல தகவல்கள் உள்ளன. அதை அவர் வெளிப்படுத்த வேண்டும்...

செவ்வாய் August 22, 2017

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியால் வடக்கு கிழக்கு மக்கள் அதிகளவு பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அந்த மாகாணங்களை சேர்ந்தவர்கள் என இடர் முகாமைத்துவ

செவ்வாய் August 22, 2017

 விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் முக்கிய பிரதிநிதியாக செயற்பட்ட சீன நாட்டவரின்

செவ்வாய் August 22, 2017

கதிர்காமம் தேவாலயத்தை திறப்பதில் குழப்ப நிலை தோன்றியுள்ளது. அதன் பூசகர் தாமதப்படுத்தியமை காரணமாக அதிகாலை பூசை இடம்பெறவில்லை.