மகாநாயக்க தேரர்­களை வெளி­நாட்டு இராஜதந்திரிகள் சந்திக்க முயற்சி!

ஒக்டோபர் 21, 2017

புதிய அரசியல் அமைப்பபைக் உருவாக்கும் முயற்சியை கைவிடுமாறு மகாநாயக்க தேரர்­கள் அழுத்­தம் கொடுத்­து­வ­ரும் நிலை­யில், அவர்­களை நேரில் சந்­தித்­துப் பேச்சு நடத்­து­வ­தற்கு கொழும்­பி­லுள்ள வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­கள் தீர்­மா­னித்­துள்­ள­னர் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

மகா­நா­யக்க தேரர்­களை தனித்­த­னியே சந்­தித்து, இலங்­கைக்கு ஏன் புதிய அர­ச­மைப்பு அவ­சி­ய­மா­கின்­றது என்ற முக்­கி­யத்­து­வத்தை எடுத்­து­ரைக்­க­வுள்­ள­னர். இலங்­கை­யில் வாழும் சகல இன மக்­க­ளுக்­கும் உரி­மை­கள் வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்­பதே பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் எதிர்­பார்ப்­பாக இருக்­கின்­றது. அதற்­கா­கவே அழுத்­தம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது.

மாறாக, பன்­னாட்­டுச் சூழ்ச்­சி­க­ளின் பிர­கா­ரம் அர­ச­மைப்பை தயா­ராக்­கு­மாறு அழுத்­தம் கொடுக்­க­வில்லை என்று மகா­நா­யக்க தேர­ரர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கப்­ப­டும்.

அப்­போது பன்­னாட்­டுச் சமூ­கம் மீதான அச்­சம் நீங்­கக்­கூ­டும் என்று பெயர் குறிப்­பிட விரும்­பாத இரா­ஜ­தந்­திரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

செய்திகள்