போராடும் மாணவர்களே மே 17 இயக்கம் உங்களோடு துணை நிற்கும்!

செப்டம்பர் 10, 2017

தொடர்ச்சியாக ’நீட்’ எனும் அரக்கனை எதிர்த்து தமிழகமெங்கும் மாணவ/மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதை உரிய முறையில் அணுகி தமிழக மக்களின் போராட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டிய பிஜேபியின் பினாமி அரசு போராடுகிறவர்களை கைது செய்து மிரட்டும் இழிசெயலை பரவலாக செய்து வருவதாக அறிகிறோம்.

 குறிப்பாக நுங்கபாக்கத்தில் போராடிய பள்ளி மாணவிகளை மிரட்டியும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்போன மாணவர்களை கைது செய்திருக்கிறது. மேலும் புதுக்கோட்டையில் மனு அளிக்க சென்ற 15பேரை கைது செய்து இன்று சிறையில் அடைத்திருக்கிறது. அதுபோக மதுரையில் ஏற்கனவே 83பேர், சென்னை பெசண்ட் நகரில் போராடிய மாணவர்கள் என்று தொடர்ச்சியாக போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்ய ’சிறை’ என்ற கொட்டடியை காட்டி பயமுறுத்த நினைக்கிறது பிஜேபியின் அடிமை அரசான எடப்பாடி அரசு.

ஆனால் அதையும் மீறி தொடர்ந்து தமிழகமெங்கும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே நேரத்தில் போராடுகிறவர்கள் யாருக்கு என்ன வகையான சட்ட உதவிகள் தேவையென்றாலும் உடனடியாக மே பதினேழு இயக்க தொலைபேசி எண்ணான 9884072010 தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான சட்ட உதவியை செய்து தர மே பதினேழு இயக்கம் எப்போதும் தயாராக இருக்கிறது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே எந்தவித தயக்கமில்லாமல் போராட்டத்தை முன்னெடுங்கள். உங்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்து ’நீட்’ எனும் இந்த அரக்கனை தமிழகத்திலிருந்து விரட்டி அடிப்போம். அதுவே அரியலூர் டாக்டர் அனிதாவிற்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.

நன்றி 
மே பதினேழு இயக்கம்

செய்திகள்
புதன் யூலை 18, 2018

காவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!