பெண் ஒருவரைத் தாக்கியதாக கூட்டமைப்பு வேட்பாளர் கைது !

January 11, 2018

பெண் ஒருவரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் நாகராசா பகிரதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் காவல் துறையினர்  தெரிவித்தனர்.

“வேட்பாளரின் குடும்பத்துக்கும் அயல் வீட்டிலுள்ள குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு இடம் பெற்ற நிலையில் வேட்பாளரின் மனைவி அயல் வீட்டுப் பெண்ணுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அந்தப் பெண் வேட்பாளரின் வீட்டுக்குச் சென்று பேசியுள்ளார். அதனை அடுத்து அந்தப் பெண்ணை வேட்பாளர் தாக்கியுள்ளார்.சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பெண் நேற்று முறைப்பாடு வழங்கியுள்ளார். இதனடிப்படையில் மானிப்பாய் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் நாகராசா பகிரதன் இன்று காலை கைது செய்யப்பட்டார்” என்று காவல் துறையினர்  மேலும் தெரிவித்தனர்.

எனினும் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டிக்கு வந்தமையால் காவல் துறை  பிணையில் விடுவிக்கப்பட்டதாக மானிப்பாய் காவல் துறையினர்  தெரிவித்தனர்.

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

மன்னார் பெரியகரிசல் பகுதியில் அமைந்துள்ள பழைய கப்பலேந்திமாதா ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மாதா சொருபத்தினை தாக்கி கத்தோலிக்க தமிழ் மக்களை அச்சுறுத்தி அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கான முய