புளொட் அமைப்பின் முடிவு என்ன?

December 07, 2017

தமிழரசுக் கட்சியுடன் அதிருப்தியடைந்துள்ள புளொட் அமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நீடிப்பது குறித்து, மத்திய குழுவைக் கூட்டியே ஆராய்ந்த பின்னரே முடிவை அறிவிக்கும் என, அந்த அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் தமிழரசு கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதில்லை என்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றன. 

இதேபோன்று புளொட் அமைப்பும் தமிழரசுக் கட்சியில் அதிருப்தியுற்றிருக்கின்ற நிலையில், அக் கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

எமது கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து புளொட் அமைப்பின் மத்திய குழுவை கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 

அத்துடன், புளொட் அமைப்பு தனித்து நின்று உள்ளுராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ள போவதில்லை என கூறியுள்ள சித்தார்த்தன், தங்கள் முடிவும் விரைவில் தெரிவிக்கப்படுமென்றார். 

செய்திகள்
திங்கள் December 18, 2017

 23 ஆம் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் வைபவத்தில் பங்கேற்பதற்காகவே

திங்கள் December 18, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சேவல் சின்னத்தில் பல இடங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளது.