புலிகள் மீதான பயங்கரவாதத் தடையை கனடா அரசு உடன் நீக்கவேண்டும்

April 14, 2018

"தமிழ் புலிகளை பயங்கரவாத பட்டியலில்கனடிய அரசு" இன்னமும் வைத்திருப்பது  கனடாவில்தமிழர்கள் தலைக்கு மேல் மேலாக தொங்கும் கருப்புமேகம் போன்றது.புலிகள் மீதான கனடிய அரசின் தடையை உடனடியாக நீக்க கோரி Hon. Jack McLaren Ontario நாடாளுமன்றத்தில்   தனிநபர் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தார்.

தமிழீழ விடுதலை புலிகள் மீதான கனடிய மத்திய அரசின் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என ஒண்டாரியோ நாடாளுமன்றில் கேள்வி நேரத்தின் போதும் கோரிக்கையை எழுப்பி, அவர் அனைத்து கட்சிகளின் ஆதரவை உரிமையோடு கோரினர்.

பெருமளவான தனது ஆதரவாளர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, கனடாவில் முதல் முதலாக ஒரு அரசியல் தலைவர் தமிழ் கனேடியர்கள் அவசியமற்ற இந்த புலிகளின் மீதான தடை மூலம் நாளாந்தம் சந்திக்கும் பிரச்சனைகளையும், சவால்களையும் விளக்கமாக அனைத்து  கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காடியது அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.

தமிழர் அல்லாத ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு தமிழர்களின் வரலாற்றையும்  சுதந்திர விடுலைதலைப் போராட்டத்தையும் ஆழமாக உள்வாங்கி தனது அரசியல் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கடந்த சில வருடங்களாக கனடிய தமிழர்களின் அவமானமாக பதிவு செய்யப்படட இந்த தடையை அகற்ற உழைப்பது பிரமிப்பையும் அவர் மேல் மிகுந்த அன்பையும் தமிழ் மக்கள் மனதில் இந்த நிகழ்வு உருவாக்கியது.

தனது பிரேரணையை சமர்ப்பித்து அவர் உரையாற்றும் போது பின்வருமாறு குறிப்பிடடார்,

இலங்கையில் தமிழ் மக்கள்  1948 ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே அடக்குமுறையை  அனுபவித்துவருகின்றனர். அந்த அடக்குமுறையை எதிர்கொள்ள 1976 ஆம் ஆண்டு தமிழ் மக்களை பாதுகாக்க ராணுவ அமைப்பாக  விடுதலைப் புலிகள் (LTTE) உருவாக்கினர். 1983 ல் உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. புலிகள் படை ஒரு வலுவான போரிடும் படையாக மாறியது.

2006 ல் கனேடிய அரசாங்கம் ஒரு இலங்கை அரசின் பொய் பரப்புரைகள் மூலம் ஈர்க்கப்பட்டு "பயங்கரவாத பட்டியலில் தமிழ் புலிகளை சேர்த்தது. இந்த விளைவு தமிழ் மக்களை இரண்டாம் தர மக்களாக உலகின் பார்வையில் பார்க்க வைத்தது.

புலிகள் தோற்றத்திற்கு காரணம் தமிழர்கள் அல்ல அதனை இன்று வரை சர்வதேசம் சரியாக புரியவில்லை. அதற்குக் காரணம் இலங்கை அரசு என்பதை யாரும் புரியாமல் பயங்கரவாதிகள் என கூறுவது  வேதனையாக உள்ளது.

உள்நாட்டுப் போர் 2009 ல் முடிவுக்கு வந்தது. புலிகள் ஆயுத போரை கை விட்டனர் . புலிகள் மீண்டும் ஒரு போராடும் படையாக  அணி திரள போவதில்லை. 

எதற்காக விடுதலைப் புலிகளை பயங்கர வாதிகளாக சித்தரிக்க வேண்டும்  எனவே  "பயங்கரவாத பட்டியலில்" இனி வைத்திருக்கத் தேவையில்லை. 

இணைப்பு: 
செய்திகள்
திங்கள் April 23, 2018

அன்னை பூபதியின் முப்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும்  பிரித்தானியாவில் இரண்டு இடங்களில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

வியாழன் April 19, 2018

இனப்படுகொலைச் சிறிலங்கா சிங்கள அரசின் அதிபர் மைத்திரிக்கு எதிராக லண்டனில்  

செவ்வாய் April 17, 2018

அண்மைய காலங்களில் கனடிய தமிழர், தாயக தமிழரிடம் எமக்கென்றான வரலாறு வாழ்க்கை முறை சார்ந்த திரைப்படத்துறையினைக் கட்டியெழுப்புதலில் ஆர்வம் மிகுந்து கிடப்பது வரவேற்கத்தக்கதாகும்.  இன்று ஒட்டாவாவில் நடைப