புலம் பெயர் உறவுகளை எச்சரித்த பிரிகேடியர் சிறிலங்கா வந்தடைந்தார்!

February 22, 2018

சர்ச்சைக்குட்பட்ட  பிரித்தானியாவுக்கான சிறிலங்கா  தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இன்று சிறிலங்கா  வந்தடைந்தார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, கலந்துரையாடல் ஒன்றுக்காகவேசிறிலங்காவிற்கு  மீள  அழைக்கப்படுவதாக தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்திருந்தார்.

இதேவேளை, அவருக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கையோ விசாரணையோ  முன்னெடுக்கப்படாது என்றும் அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதெனவும் அவர் பாரிய குற்றங்கள் எதையும் செய்ததாக கருதவில்லை.  அந்த இடத்தில்   பிரபாகரன்  மற்றும்  தனி ஈழம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேசியிருக்கின்றனர். 

அதனால் அந்த அதிகாரி அவ்வாறு நடந்துகொண்டிருக்கின்றார்.  அதில் எந்தப் பெரிய தவறையும் நாங்கள்  காணவில்லையென தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அவர் இன்று பிரித்தானியாவிலிருந்து சிறிலங்கா வந்துள்ளார்.

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

மன்னார் பெரியகரிசல் பகுதியில் அமைந்துள்ள பழைய கப்பலேந்திமாதா ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மாதா சொருபத்தினை தாக்கி கத்தோலிக்க தமிழ் மக்களை அச்சுறுத்தி அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கான முய