பிரான்ஸ் பிரஜை படுங்காயம்!

August 12, 2017

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதரயிலுள்ள கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் பிரஜையொருவர் படுகாயமடைந்துள்ளார். 

அவர் நேற்று மாலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.  இந்த வெடிப்பு சம்பவத்தில்சாலி ரொப்ரோ (வயது 24) என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பிரான்ஸ் பிரஜையுடன் பயணஞ் செய்த பெண் ஒருவரும் அதிர்ச்சியடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கற்குவாரியில் வைக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததால், பாரிய கல்லொன்று சுமார் 300 மீற்றர் தொலைவில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், அக்கல்லானது, கற்குவாரிக்கு அருகில் மோட்டார் சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த பிரான்ஸ் நபர் மீது பட்டதால், அவர் காயமடைந்துள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் வல் துறையினர்  தெரிவித்தனர். 

கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், அருகிலிருந்து தேயிலை தொழிற்சாலை அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளதாக, காவல் துறையினர்  தெரிவித்தனர்.

செய்திகள்
செவ்வாய் August 22, 2017

காணாமற்போனோர் தொடர்பாகவும் அவரிடம் பல தகவல்கள் உள்ளன. அதை அவர் வெளிப்படுத்த வேண்டும்...

செவ்வாய் August 22, 2017

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியால் வடக்கு கிழக்கு மக்கள் அதிகளவு பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அந்த மாகாணங்களை சேர்ந்தவர்கள் என இடர் முகாமைத்துவ

செவ்வாய் August 22, 2017

 விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் முக்கிய பிரதிநிதியாக செயற்பட்ட சீன நாட்டவரின்

செவ்வாய் August 22, 2017

கதிர்காமம் தேவாலயத்தை திறப்பதில் குழப்ப நிலை தோன்றியுள்ளது. அதன் பூசகர் தாமதப்படுத்தியமை காரணமாக அதிகாலை பூசை இடம்பெறவில்லை.