பலாத்காரப்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் வீட்டிற்குச் சென்றார் மைத்திரி

ஒக்டோபர் 21, 2017

புங்குடுதீவில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் குடும்பத்தினர் வசிக்கும் வவுனியாவில் உள்ள வீட்டிற்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) சென்றார். 

ஏற்கனவே, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின்போது, வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே இன்று அங்கு சென்றார் என ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மாணவி வித்தியாவின் மூத்த சகோதரியின் உயர் கல்வி நடவடிக்கைக்காகவும் அவரது குடும்பத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த உதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி கூறினார். 

இதேவேளை, இந்தச் சந்திப்பானது ஜனாதிபதியின் அரசியல் நடவடிக்கை எனவும் ஊடகங்களுக்கும் உலகத்திற்கும் அவர் படம் காட்டுகின்றார் எனவும் தமிழ்த் தேசியவாதிகள் கூறியுள்ளனர்.

இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்ட இலட்சக்கணக்கானோரின் படுகொலைகளுக்கு இதுவரை நீதி வழங்கப்படாத நிலையில், ஜனாதிபதி இவ்வாறு செயற்படுவது அவரது அரசியல் சார்ந்த விடயம் எனவும் அவர்கள் கருத்துக் கூறியுள்ளனர். 

செய்திகள்