நீர்மூழ்கிக் கப்பல் “காந்தேரி” தயார்

January 12, 2017

இந்திய கப்பல் படையின் இரண்டாவது ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பல் “காந்தேரி“, முழுமையாக கட்டமைக்கப்பட்டு பயிற்சிக்காக இன்று கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரான்ஸ்- இந்தியா கூட்டு தொழில் நுட்பத்தில் 6 நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க 2005-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் மும்பையில் உள்ள எம்.டி.எல். கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படுகிறது.

இதில் முதல் நீர்மூழ்கிக் கப்பல் “கல்வாரி” கடந்தாண்டு தயாரிக்கப்பட்டு, தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டில் பயிற்சி மற்றும் சோதனையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது நீர்முழ்கியின் கட்டுமானம் முடிக்கப்பட்டு இன்று பயிற்சி மற்றும் சோதனைக்காக கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு “காந்தேரி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மும்பையில் இன்று நடந்த விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை இணைமந்திரி சுபாஷ் பாம்ரே தலைமையில் அவரது மனைவி பினா பாம்ரே நீர்மூழ்கியை பயிற்சிக்காக கடற்படையிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் கடற்படைத் தலைமைத் தளபதி சுனில் லாம்பா முன்னிலை வகித்தார்.

மேம்பட்ட தகவல் தொழில்நுட்பங்கள் மற்றும் எதிரிக் கப்பல்களை குறி வைத்து தாக்கும் திறன் கொண்ட இந்த ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிகள், கடலில் வைத்து சில காலம் பயிற்சி மற்றும் பரிசோதனைகள் கடற்படையால் நடத்தப்படும்.

அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின்னர் நாட்டிற்காக கடற்படையில் இணைக்கப்படும் என கடற்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

செய்திகள்
ஞாயிறு April 23, 2017

புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஞாயிறு April 23, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பயங்கரமான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவியல் நிபுணர்குழு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஞாயிறு April 23, 2017

தனது தேசம் மீது இரசாயன தாக்குதலை நடத்துவதற்கு அமெரிக்கா திட்டமிடுவதாக குற்றம்சாட்டியிருக்கும் வடகொரிய அரசாங்கம் இதனை தாங்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை என்றும் உலகில் இருந்து அமெரிக்க

ஞாயிறு April 23, 2017

பாரீஸ் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித் திரிந்து பீதியை கிளப்பிய மர்ம நபர்  காவல்துறையால்  கைது செய்யப்பட்டார்