நான் இயக்குநராக விரும்பினேன்!

செப்டம்பர் 13, 2017

தான் ஆரம்பத்தில் இயக்குநராக வேண்டும் என்று நினைத்ததாக நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.  டொரண்டோ திரைப்பட விழாவில், தனது முதல் வட கிழக்கு தயாரிப்பான 'பாஹுனா: தி லிட்டில் விஸிட்டர்ஸ்' என்ற திரைப்படத்தை பிரியங்கா திரையிட்டார். படத்துக்கு ரசிகர்கள் ஏகோபித்த பாராட்டுகளை வழங்கினர்.

தங்கள் பெற்றோரைப் பிரிந்த மூன்று நேபாள குழந்தைகள், மீண்டும் தங்கள் வீட்டுக்கு பயணப்படுவதை சொல்லும் படம் 'பஹுனா'. இந்த திரையிடலை ஒட்டி தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பிரியங்கா பகிர்ந்திருந்தார். அதில், "இல்லை என்ற சொல்லை ஏற்காதீர்கள். ஏனென்றால் யாரோ ஒருவர் ஆமாம் என்று சொல்லத் தயாராக இருப்பார். எனது முதல் பெண் இயக்குநர் பாகி ஏ டயர்வாலா குறித்து பெருமை கொள்கிறேன். இந்தப் படத்தை எடுக்க முடியாது என்று சொன்னவர்கள் முன்னால் தைரியமாக விடாமல் உழைத்தார்.

வணிகரீதி படம் என சிலர் கருதாத ஒரு அழகான கதையை சொல்ல நினைத்ததற்கு பாராட்டுகள். இன்று சர்வதேச தளத்தில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது. கரவொலிகள் நீண்ட நேரம் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

இந்த முயற்சிக்கு மக்கள் எழுந்து நின்று கை தட்டியதைப் பார்க்கும்போது நெகிழ்ந்துவிட்டேன். இதுதான், இந்த உணர்வுக்காகத்தான் நான் இயக்குநராகவேண்டும் என நினைத்தேன்" என்று பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள்