நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சீனா கடும் அதிருப்தி?

யூலை 19, 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தல் பரப்புரைகளுக்காக சீனா நிதி வழங்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் விவாதம் தொடர்பில் சீனா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனா கடந்த ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகளுக்காக 7 மில்லியன் டொலர்களை வழங்கியதாக அண்மையில் தி நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த விவகாரம் இராஜதந்திர ரீதியிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியதைத் தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விசேட விவாதம் ஒன்று நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது அதிருப்தியை வெளியிட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது

செய்திகள்
செவ்வாய் August 14, 2018

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகளான பா.செயந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா...