தெலுங்கானாவில் கோர விபத்து - 45 பேர் பலி!

செப்டம்பர் 11, 2018

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் வரை பலியானதாக தகவல் வெளியாகி உள்ளன.  தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் இன்று பயணிகளுடன் வந்துகொண்டிருந்த  பேருந்து ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த மலைப்பள்ளத்தாக்கில் அந்த பேருந்து கவிழ்ந்து விழுந்தது.
 
இந்த விபத்தை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினர்  தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் 45 பேர் வரை இறந்திருப்பதாக மாவட்ட எஸ்பி உறுதி செய்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  

செய்திகள்
சனி செப்டம்பர் 15, 2018

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

புதன் செப்டம்பர் 12, 2018

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி  இன்று டெல்லியில்  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை