தடை செய்யப்பட்ட பொலிதீன் உற்பத்தியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை!

March 21, 2018

சுற்றாடலுக்கு பாதிப்பற்ற பொலிதீன் என்று கூறி போலியான முறையில் தடை செய்யப்பட்டுள்ள பொலிதீன் வகைகளை உற்பத்தி செய்யும் வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை கூறியுள்ளது. 

அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அதன் விசாரணைப் பணிப்பாளர் என்.எஸ். கமகே கூறினார். 

எனினும் பெரும்பாலான பொலிதீன் தயாரிப்பாளர்கள் சுற்றாடலுக்கு பாதிப்பற்ற பொலிதீன் தயாரிப்பிலேயே ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

செய்திகள்