சிறிலங்கா உயர் ஸ்தானிகர் இராஜினாமா செய்யவில்லையாம்!

February 22, 2018

ஐக்கிய இராச்சியத்திற்கான சிறிலங்கா  உயர் ஸ்தானிகர் அமரி விஜேவர்தன பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றும் அவரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. 

அமரி விஜேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருடன் தொடர்புபடுத்தி ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்து தவறானது என்று வௌிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐக்கிய இராச்சியத்திற்கான சிறிலங்கா உயர் ஸ்தானிகர் அமரி விஜேவர்தனவின் பதவி ஒப்பந்தக் காலம் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. 

அதன்படி அமரி விஜேவர்தன அவரது விருப்பின் பேரில் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியன்று அவரது ஒப்பந்த காலத்தை முடிவுறுத்த உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள்
வியாழன் செப்டம்பர் 20, 2018

பிமல் ரத்நாயக்க எம்.பியும்  சுமந்திரன் எம்.பியும்  நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு