சிறார்களுக்கு யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

June 07, 2018

தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தாயக மாணவச் சிறார்களுக்கு யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல் 

தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவுதினம் அன்று   மட்டக்களப்பில்   மண்முனைப்பற்றிலமைந்துள்ள கிரான்குள விஸ்ணு வித்தியாலயத்தில் உள்ள 32 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக வழங்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டு இணைப்பாளர் திரு சுரேஷ் தர்மலிங்கம் அவர்களின் தலைமையில் வணக்க நிகழ்வு நடைபெற்றதுடன்  தொடர்ந்து மாணவர்களுக்கான உதவி வழங்கல் நிகழ்வும் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் ஏனைய 2 மாணவர்களுக்கான இரண்டு வருடகற்கைக்கான  நிதியுதவியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எமது தேசத்தின் எதிர்கால செல்வங்களாக இம் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க இச் சிறிய உதவி பயனாக அமைந்திருக்கும் என நம்புகின்றோம்.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் August 07, 2018

தமிழினத்திற்கு முகமும், முகவரியும் தந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதியின் பிறந்த நாளை தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமி

வெள்ளி யூலை 27, 2018

 TELO  நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை