சவுதி அரேபியா இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை!

செப்டம்பர் 11, 2018

பாரீஸ் விடுதியில்  சவுதி அரேபியா இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சவுதி அரேபியாவை சேர்ந்த இளவரசி ஒருவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ‘ரிட்ஸ்’ என்ற 5 நட்சத்திர விடுதியில்  தங்கி இருந்தார்.

இந்தநிலையில் அவர் தங்கி இருந்த ஆடம்பர அறையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அறையில் வைத்திருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

அவற்றின் மதிப்பு ரூ.7 கொடி (9 லட்சத்து 30 ஆயிரம் டாலர்) என மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த விடுதியில் இந்த ஆண்டில் மட்டும் 2-வது தடவையாக கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஜனவரியில் இந்த விடுதியில் உள்ள கடைகளில் இருந்து ஒரு கும்பல் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
சனி செப்டம்பர் 15, 2018

அமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது.