சதுரிகா சிறிசேன எழுதிய நூல் வெளியீடு!

செப்டம்பர் 14, 2017

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்து அவரின் மூத்த புதல்வி சதுரிகா சிறிசேன எழுதியுள்ள நூல் ஒன்று வௌ்ளிக்கிழமை(15) வெளியிடப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுயசரிதை உள்ளடங்கலான “ஜனாதிபதி தகப்பன்” என்ற பெயரில் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப பட்டதாரியான ஜனாதிபதியின் மூத்த புதல்வி சதுரிகா அதனைத் தொகுத்துள்ளார். இதன் வெளியீடு 15ஆம் திகதி மாலை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பதவியில் இருக்கும் ஜனாதிபதியொருவரைக் குறித்து அவரது புதல்வி தொகுத்த முதலாவது சுயசரிதை நூலாக இது வரலாற்றில் இடம்பெறவுள்ளது. மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல், 2015ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நிகழ்ந்த இதுவரை வெளிவராத சம்பவங்கள் குறித்தும் இந்த நூலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

ஸ்ரீமா  அம்மையார் தொடக்கம் அரசியல் தலைவர்களினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் செயற்பாடுகளின் போது காலத்துக்குக் காலம் தமது குடும்பத்துக்கு அதனால் ஏற்பட்ட அழுத்தங்கள் குறித்தும் சதுரிகா தனது நூலில் விலாவரியாக குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள்