கோவையில் மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு !

செப்டம்பர் 12, 2017

கோவையில் மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு செப்டம்பர் 10 - 2017, ஞாயிறு மாலை 5 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கு.ராமகிருஷ்ணன், தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன், அடக்குமுறை எதிர்ப்பு கூட்டியக்கத்தின் தோழர் பார்த்திபன் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் அருள்முருகன், பிரவீன் குமார் ஆகியோர் உரையாற்றினர். 

ஏராளமான மாணவர்கள் இளைஞர்கள் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் இந்துத்துவ பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இடதுசாரி எழுத்தாளர் கெளரி லங்கேஷ் மற்றும் நீட் தேர்வால் கொல்லப்பட்ட மாணவி அனிதா ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்வரும் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது :

- நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்
- கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்று.
- கல்வியை காசாக்கும் WTO ஒப்பந்தத்திலிருந்து இந்திய அரசே வெளியேறு.

இணைப்பு: 
செய்திகள்
ஞாயிறு January 14, 2018

தமிழக மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் தைத் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்...

ஞாயிறு January 14, 2018

தமிழினத்தின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் திருவிழா நாளில் தமிழ்மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு January 14, 2018

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ் தேசிய இனத்தின் மற்றும் ஒரு புத்தாண்டு...

சனி January 13, 2018

நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு கhலத்தால் அழியாத கhவியங்களை தந்த படைப்பாளிதான் கவிப்பேரரசர் வைரமுத்து அவர்கள் ஆவார்கள். தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார்.

சனி January 13, 2018

சிதம்பரம் தொடர்வண்டி மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி (தியாகி) இராசேந்திரன் பெயர் சூட்ட வேண்டும் என கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ்த்தேசியப் பேரியக்கமும், சிதம்பரம் தமிழ்க் காப்பணியும் இன்னும் பல