கோரக்பூர் மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி

August 13, 2017

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் நோய் தொற்று காரணமாக 5 நாட்களில் 60 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் ஆதித்யநாத்தின் சொந்த ஊரும் அவரது மக்களவை தொகுதியுமான கோரக்பூரில் அரசுக்கு சொந்தமான பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த 5 நாட்களில் அடுத்தடுத்து 60 குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் 2 நாட்களில் மட்டும் (10, 11) 30 குழந்தைகள் இறந்தனர்.

 பெரும்பாலான குழந்தைகளின் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக, ஒப்பந்த நிறுவனத்துக்கு பாக்கி வைத்ததால் அந்த நிறுவனம் ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை செய்வதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதவிர மூளை யில் ஏற்பட்ட நோய் தொற்றும் சில குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கோரக்பூர் மாவட்ட ஆட்சியர் ராஜீவ் ரவ்தேலா மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 24 மணி நேரத்தில் அறிக்கை வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த முதல்வர் ஆதித்யநாத், கோரக்பூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர் ஆஷுதோஷ் தாண்டன் ஆகிய இருவருக்கும் உத்தரவிட்டார்.

இதையடுத்து கோரக்பூர் செல்வதற்கு முன்பு இரு அமைச் சர்களும் முதல்வரை சந்தித்தனர். அப்போது தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கோரக்பூர் சென்ற இரு அமைச்சர்களும் ஆய்வு நடத்தினர்.

பின்னர் அமைச்சர் தாண்டன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பொறுப்பற்ற முறையில் செயல் பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜிவ் மிஷ்ரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் நிலை விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. அக்குழு அறிக்கை தாக்கல் செய்ததும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கும் நிறுவனம் நிலுவைத் தொகையை வழங்குமாறு கல்லூரி முதல்வருக்கு கடந்த 1-ம் தேதி கடிதம் எழுதி உள்ளது. அந்தக் கடிதம் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலுவைத் தொகை 5-ம் தேதி கல்லூரி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 11-ம் தேதிதான் கல்லூரி நிர்வாகம் அந்தத் தொகையை நிறுவனத்துக்கு வழங்கி உள்ளது. இந்த காலதாமதத்துக்கு காரணம் என்ன என்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.

அறிக்கை கேட்கும் மத்திய அரசு

இதுபோல, இந்த சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் மற்றும் துறையின் செயலாளர் சி.கே.மிஸ்ரா ஆகியோருக்கு மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நேற்று உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில சுகாதாரத் துறைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமரிடம் முதல்வர் விளக்கம்

கோரக்பூர் புறப்படுவதற்கு முன்பு அமைச்சர் அனுபிரியா படேல் கூறும்போது, “இந்த சம்பவத்தால் பிரதமர் மோடி கவலை அடைந்துள்ளார்” என்றார்.

இதுபோல பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில், “கோரக்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து நிலைமையை கவனித்து வருகிறார். இதுதொடர் பான தகவலை மத்திய, மாநில அரசுகளிடம் அவ்வப்போது கேட்டறிந்து வருகிறார்” என பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் ஆதித்ய நாத், பிரதமர் மோடியை தொடர்புகொண்டு இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத், உ.பி. காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் குலாம் நபி ஆசாத் கூறும்போது, “மாநில அரசின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம். சுகாதார அமைச்சரையும் மருத்துவக் கல்வி அமைச்சரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த சம்பவத்துக்கு முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும்” என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில், “இந்த சம்பவத் துக்கு பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும். இதற்குக் காரண மானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

உண்மையை மறைக்க முயற்சி

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, “கோரக்பூர் சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண் டும். ஆனால் உண்மையை மறைக்க பாஜக அரசு முயற்சிக் கிறது. குழந்தைகளின் சடலங் கள் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி தவறு செய்த வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் வலியுறுத்தி உள்ளார்.

கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 9-ம் தேதி அந்த மருத்துவமனையை முதல்வர் ஆதித்யநாத் பார்வையிட் டுள்ளார். ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தொடர்பாக மருத்து வமனை நிர்வாகத்தினர் முதல் வரிடம் தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

யோகி ஆதித்யநாத் முதல்வ ராக பொறுப்பேற்ற பிறகு கோரக்பூர் மருத்துவமனைக்கு கூடுதல் நிதி வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், போதிய மருத்துவர்கள் இல்லை என்றும் உரிய மருந்து பொருட்களோ (ஆக்ஸிஜன் உட்பட) முறையான சிகிச்சையோ வழங்கப்படவில்லை என்றும் நோயாளிகள் புகார் தெரி வித்துள்ளனர்

செய்திகள்
புதன் யூலை 18, 2018

காவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!