கொழும்பில் இத்தாலியின் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல்!

January 12, 2017

இத்தாலி நாட்டின் பேர்காமினி வகையைச் சேர்ந்த ஐரிஎஸ் கராபினியர் என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நேற்றையதினம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நான்கு நாட்களாக நல்லெண்ணப் பயணம்செய்து கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த போர்க்கப்பலுக்கு சிறீலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பளித்தனர்.

எதிர்வரும் 14 ஆம் நாள் வரை கொழும்புத்துறைமுகத்தில் தங்கியிருக்கும் குறித்த கப்பலானது சிறீலங்கா கடற்படையுடன் பல பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.

அவுஸ்திரேலியா செல்லும் வழியிலேயே குறித்த போர்க்கப்பலானது கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
வெள்ளி January 20, 2017

படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் முன்னாள் போராளிகளைக் கைது செய்து வருகின்றனர்....