கேணல் கிட்டு நினைவான தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் - 2018

January 07, 2018

ஜனவரி மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை), ஒஸ்ரேலியா மெல்பேர்னில் East Burwood Reserve மைதானத்தில் கேணல் கிட்டு ஞாபகார்த்த ”தமிழர் விளையாட்டு விழா 2018” நடைபெறவுள்ளது.

அனைத்துத் தமிழ் உறவுகளையும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து இத்தமிழ் ஒன்றுகூடல் நிகழ்வுகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கெடுத்து தாயக உணவுகளையும் உண்டு சுவைத்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

இந்நிகழ்வில் வழமைபோல் துடுப்பெடுத்தாட்டம், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம் மற்றும் சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள், கிளித்தட்டு உட்பட தாயக விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன. 

இத்துடன் நாள் முழுவதும் ஒடியற்கூழ் உட்பட சுவையான தாயக உணவு வகைகளும் விற்பனைக்கு உள்ளன.  அனைத்துத் தமிழ் உறவுகளையும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து இத்தமிழ் ஒன்றுகூடல் நிகழ்வுகளிலும், விளையாட்டுப் போட்டி-களிலும் பங்கெடுத்து தாயக உணவுகளையும் உண்டு சுவைத்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம். 

மேலதிக விபரங்களிற்கும், பதிவுகளிற்கும் 0401 111 120 அல்லது 0404 802 104 அல்லது 0423 577 071 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி

தமிழர் ஓருங்கிணைப்புக் குழு (விக்ரோரியா)

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் June 19, 2018

பிரான்சில் செல் பிராங்கோ தமிழ்ச்சங்கம், செல் தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி 2018 கடந்த 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான செல் பகுதியில் காலை 10.00 மணிக்கு ஆர

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....

வியாழன் June 07, 2018

தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தாயக மாணவச் சிறார்களுக்கு யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்