காணாமல் போனோர் அலுவல வர்த்தமானி!

செப்டம்பர் 13, 2017

காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (12) இரவு தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு 14ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் காணாமல் போனோர் அலுவலகம் நிறுவப்பட்டது. மேலும் இந்த வர்த்தமானி அறிவித்தல் வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

செய்திகள்