காணாமற் போன மீனவர்கள் சடலமாக மீட்பு!

June 13, 2018

தலைமன்னார் கடற்பகுதியூடாக கடந்த வெள்ளிக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்குச்  சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  இரு மீனவர்கள்  5 நாட்களின் பின்னர், இன்று (13) பிற்பகல் யாழ்., புங்குடுத்தீவு கடற்கரையில் சடலங்களாக கரை ஒதுங்கியுள்ளதாக, ஊர்காவற்றுறை காவல் துறையினர்  தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக் கிழமை (08)ஆம் திகதி, தலைமன்னார் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த, சகோதரர்களான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது 37) ஆகிய இருவரும் கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக  படகு ஒன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர்.

கடலுக்குச் சென்ற குறித்த இரு மீவர்களும், குறித்த நேரத்துக்கு கரை திரும்பாததால் தலைமன்னார் மேற்கு மீனவ சமூகம் பத்து படகுகளில் 40 மீனவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனாலும் குறித்த மீனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையிலேயே, இன்று  (13) மதியம் சடலங்களாக  கரை ஒதுங்கியுள்ளதாக,  காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.

செய்திகள்
செவ்வாய் August 14, 2018

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகளான பா.செயந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா...