கழிவு தேயிலை ஏற்றிச்சென்ற இருவர் கைது

ஒக்டோபர் 12, 2017

சிறிலங்கா - ஹட்டனில், பயன்படுத்தப்பட்ட பின்னர் வெளியே கொட்டப்பட்ட கழிவுத் தேயிலையை டிப்பர் லொறியொன்றில் ஏற்றிச்சென்ற இருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா தேயிலை தொழிற்சாலை பகுதியில் இன்று (12) இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சட்டவிரோதமாக அகரப்பத்தனை பகுதியிலிருந்து ஒருத்தொகை கழிவுத்தேயிலையுடன் லொறியொன்று வருவதாக கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் படி பொலிஸார் இந்த சுறிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது சுமார் 7500 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் டிப்பர் லொறி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட லொறியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள இருவரையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

செய்திகள்
திங்கள் December 18, 2017

 23 ஆம் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் வைபவத்தில் பங்கேற்பதற்காகவே