கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்!

August 25, 2018

ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கைப் படத்தை தொடர்ந்து கங்கனா ரணாவத் அடுத்ததாக தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் கபடி வீராங்கனையை பற்றிய படத்தில் நடிக்க இருக்கிறார். 

கங்கனா ரணாவத், ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் ‘மணிகர்னிகா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஜான்சி ராணியின் வாழ்க்கையை தவறாக சித்தரிப்பதாக இந்த படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதையும் மீறி பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி முடிந்துள்ளனர்.

தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் கபடி வீராங்கனையை பற்றிய படத்தில் நடிக்க இருக்கிறார். ‘பங்கா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஸ்வினி அய்யர் திவாரி இயக்குகிறார். இவர் தமிழில் தனுஷ் தயாரிப்பில் அமலாபால் நடித்த அம்மா கணக்கு படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிப்பது பற்றி கங்கனா ரணாவத் கூறும்போது, 

‘‘அஸ்வினி படங்களை பார்த்து இருக்கிறேன். வாழ்க்கையின் யதார்த்தங்கள் அதில் இருக்கும். பங்கா கதையை அவர் சொன்னதும் மிகவும் பிடித்துப் போனது. இந்த படத்தில் தேசிய அளவிலான கபடி வீராங்கனையாக நடிப்பதற்காக பயிற்சிகள் எடுத்துள்ளேன். கபடி வீராங்கனை கதாபாத்திரம் எனக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது’’ என்றார். 

செய்திகள்