ஒருநாள் கூட பாடசாலை செல்லாத 1523 கைதிகள் சிறைகளில்

January 12, 2018

சிறிலங்காவில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 1523 பேர் தமது வாழ்நாளில் ஒரு நாள்கூட பாடசாலைக்குச் செல்லவில்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2017 ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையின் படி, தரம் 5 வரை பாடசாலையில் கல்வி கற்றவர்கள் 6879 பேரும், தரம் 5   சித்தியடைந்த 5894 பேரும், தரம் 8 சித்தியடைந்த 6129 பேரும் சிறைச்சாலையில் கைதிகளாக உள்ளனர்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தோற்றிய 2643 பேரும் உயர்தரத்தில் தோற்றியவர்கள் 909 பேரும் பட்டதாரிகள் 55 பேரும் உள்ளனர் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெலிக்கடை, போகம்பர, மஹர உட்பட நாட்டிலுள்ள 25 சிறைச்சாலைகளில் மொத்தமாக 24 ஆயிரத்து 60 பேர் கைதிகளாக உள்ளனர் எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்திகள்
வியாழன் செப்டம்பர் 20, 2018

பிமல் ரத்நாயக்க எம்.பியும்  சுமந்திரன் எம்.பியும்  நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு