ஐஎஸ், அல்-காய்தா அச்சுறுத்தல் தொடர்கிறது: ஐ.நா. அறிக்கை

August 13, 2017

இராக்கில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சிரியாவிலும் அந்த அமைப்புக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் தீவிரமாக போரிட்டு வருகின்றன. எனினும் ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அவ்வப்போது தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக ஐ.நா. சபையின் 24 பக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராணுவரீதியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். எனினும் அந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் ஊடுருவியுள்ளனர்.

இதேபோல மேற்கு, கிழக்கு ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்ப பகுதிகளில் அல்-காய்தா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரு அமைப்புகளின் ராணுவ கட்டமைப்புகள் அழிக்கப்பட்டாலும் அவற்றால் உலக அமைதிக்கு இன்னமும் அச்சுறுத்தல் தொடர்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்