ஏழை மக்களை சென்னையை விட்டு வெளியேற்றுகிறார்கள்!

January 13, 2018

ஆறுகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஏழை-எளிய மக்களை சென்னையை விட்டு வெளியேற்றுகிறார்கள் என்று சமூக சேவகி மேதா பட்கர் குற்றஞ்சாட்டினார்.

ஆறுகள் மீட்புக்கான சமூக ஆய்வு அறிக்கையை மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு தேசிய ஆலோசகரும், சமூக சேவகியுமான மேதா பட்கர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2015-ம் ஆண்டு வெள்ளத்தை காரணம் காட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதி ஆற்றங்கரையோரங்களில் குடியிருக்கும் ஏழை-எளிய மக்களை வலுக்கட்டாயமாக அகற்றி வருகிறார்கள். அவர்களை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து தொலைவான பகுதியில் இருப்பிடம் அமைத்து கொடுக்கிறார்கள்.

ஆறுகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நிலத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆறுகளில் கலக்கும் சாக்கடை நீரினால் தான் 95 சதவீதம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆறுகளை காப்பாற்றுவதில் அரசு அக்கறை காட்டவில்லை.

ஆற்றங்கரையோரங்களில் வசித்த ஏழை-எளிய மக்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் கொடுப்பது வளர்ச்சி என்று நினைக்கிறார்கள். அவ்வாறு வெளியேறாத மக்களிடம் ரேஷன் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காது என்று போலீசார் மூலம் மிரட்டி அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

கரையோரங்களில் இருந்து அகற்றி சென்னை நகரை விட்டு வெளிப்புறத்தில் அவர்களுக்கு இருப்பிடம் வழங்குவதால் அன்றாட வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. உண்மையில் இந்த மக்களின் வாழ்வாதாரம் நகரின் முக்கிய பகுதிகளில் தான் இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

எனவே ஆற்றங்கரையோரங்களில் இருந்து நியாயமான காரணங்களுக்காக அகற்றப்படும் மக்களுக்கு நகரின் உள்ளேயே அரசு நிலங்களில் வீடுகள் கட்டி ஒதுக்கி தரவேண்டும். இதுபோல் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம் எங்கு இருக்கிறதோ? அங்கு அவர்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

செய்திகள்
ஞாயிறு January 14, 2018

தமிழக மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் தைத் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்...

ஞாயிறு January 14, 2018

தமிழினத்தின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் திருவிழா நாளில் தமிழ்மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு January 14, 2018

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ் தேசிய இனத்தின் மற்றும் ஒரு புத்தாண்டு...

சனி January 13, 2018

நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு கhலத்தால் அழியாத கhவியங்களை தந்த படைப்பாளிதான் கவிப்பேரரசர் வைரமுத்து அவர்கள் ஆவார்கள். தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார்.

சனி January 13, 2018

சிதம்பரம் தொடர்வண்டி மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி (தியாகி) இராசேந்திரன் பெயர் சூட்ட வேண்டும் என கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ்த்தேசியப் பேரியக்கமும், சிதம்பரம் தமிழ்க் காப்பணியும் இன்னும் பல