எவன்கார்ட் சம்பவத்தை விசாரிப்பதா? இல்லையா?

August 12, 2017

எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் 08 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று (11) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. 

அந்த நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்க்படப்டதன் ஊடாக அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதா இல்லையா என்பது குறித்த உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 17ம் திகதி வௌியிடப்படும் என்று கொழும்பு மேலதிக நீதவான் புத்திகஸ்ரீ ராகல அறிவித்துள்ளார். 

செய்திகள்
திங்கள் December 18, 2017

 23 ஆம் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் வைபவத்தில் பங்கேற்பதற்காகவே