எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது!

செப்டம்பர் 13, 2017

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் எண்ணம் தற்போதைக்கு அரசாங்கத்துக்குக் கிடையாது என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவருமான ராஜித சேனாரத்ன இன்று (13) தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சமயல் எரிவாயுவின் விலையை 8 தடவைகள் குறைத்திருக்கிறோம். இந்நிலையில் எரிவாயுவின் விலையை 10 வீதத்தால் அதிகரிப்பதற்கான கோரிக்கையை நிறுவனத்தினர் முன்வைத்தார்கள். எனினும் இது தொடர்பில் அடுத்த வருடம் தீர்மானிக்கலாம் என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது" என அவர் மேலும் தெரிவித்தார்.

 

செய்திகள்