இரா­ணு­வத்­தி­னர் எதேச்­ச­தி­கா­ர­மா­கச் செயற்படுகின்றனர்!

ஒக்டோபர் 21, 2017

 புதுக்­கு­டி­யி­ருப்­பில் இரா­ணு­வத்­தின் வச­முள்ள காணி­கள் விடு­விக்­கப்­ப­டும் என்று ஜனாதிபதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தார். அதை மீறும் வகை­யில்

இரா­ணு­வத்­தி­னர் எதேச்­ச­தி­கா­ர­மா­கச் செயற்­ப­டு­கின்­ற­னர்.  இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­கன் நாடா­ளு­மன்­றில் குற்­றஞ்­சாட்­டி­னார். நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற நாடா­ளு­மன்ற அமர்­வி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

அவர் தெரி­வித்­த­தா­வது-:

முல்­லைத்­தீவு மாவட்­டம் போரால் மிகப் பாதிக்­கப்­பட்ட மாவட்­டம். புதுக்­கு­டி­யிருப் பில் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­களை இரா­ணு­வத்­தி­னர் கைய­கப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். இது தொடர்­பாக அரச தலை­வ­ரு­டன் பல தட­வை­கள் கலந்­து­ரை­யா­டி­னோம்.

கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் ஜனாதிபதி காணி­களை விடு­விப்­பதற் கான வாக்­கு­று­தியை வழங்­கி­யி­ருந்­தார். எனினும் இரா­ணு­வத்­தி­னர் அவ­ரின் வாக்­கு­று­தியை நிறை­வேற்­றும் வகை­யில் செயற்­ப­ட­வில்லை. அங்­குள்ள முகாம்­களை அகற்­று­வ­தில் இரா­ணு­வத்­தி­னர் எந்­த­வித முனைப்­பும் காட்­ட­வில்லை. பாரா­மு­க­மா­கவே இருக்­கின்­ற­னர். இது தொடர்­பில் ஜனாதிபதி  கவ­னம் செலுத்த வேண்­டும்.

அதே­வேளை, நாட்­டில் நெடுஞ்­சா­லை­களை அமைப்­ப­தற்­கு­ரிய பல்­வேறு கருத்­திட்­டங்­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. திரு­கோ­ண­ ம­லை­யில் இருந்து முல்­லைத்­தீவு ஊடாக யாழ்ப்­பா­ணத்­துக்­கான நெடுஞ்­சாலை ஒன்றை அமைப்­ப­தற்­கு­ரிய கருத்­திட்­டம் முன்­னர் காணப்­பட்­டது.

தற்­போது அந்­தக் கருத்­திட்­டம் கைவி­டப்­பட்­டுள்­ள­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. வடக்­கின் பொரு­ளா­தார மேம்­பாட்­டைக் கருத்­தில் கொண்டு இந்­தத் திட்­டம் தொடர்­பில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று கோரு­கின்­றேன்.

புதுக்­கு­டி­யி­ருப்­பில் இருந்து ஒட்­டு­சுட்­டான் வரை­யான சாலை அமைப்­புப் பணி­கள் நடை­பெற்­றி­ருந்­தா­லும் அதில் இரு கிலோ­மீற்­றர்­கள் வரை­யில் அமைக்­கப்­ப­டா­துள்­ளது. அது தொடர்­பா­க­வும் கவ­னம் செலுத்த வேண்­டும்–என்­றார்.

 

செய்திகள்