இன்று வடமாகாணத்தில் பூரண கர்த்தால்!

ஒக்டோபர் 13, 2017

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று வடமாகாணத்தில் பூரண கர்த்தால் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய நாள் காலை 9.30 மணியளவில் 19 சமூக அமைப்புக்கள் இணைந்து இன்று ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

நாளையதினம் யாழ். இந்துக்கல்லூரியில் நடைபெறவுள்ள தமிழ்தின விழாவுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளநிலையில் அவரது வருகைக்கும் எதிர்ப்புத்தெரிவிக்கப்பட்டு இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், வவுனியாவில் நடைபெற்று வந்த மூன்று அரசியல் கைதிகளின் வழக்கு அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், குறித்த மூவரும் 19 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று, அத்தியாவசிய போக்குவரத்துச் சேவையைத் தவிர அனைத்துச் சேவைகளும் வடமாகாணத்தில் முடங்கியுள்ளது.

செய்திகள்
திங்கள் December 18, 2017

 23 ஆம் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் வைபவத்தில் பங்கேற்பதற்காகவே