இந்திராணிக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்ட.து!

செப்டம்பர் 09, 2018

இளம் பெண் ஷீனா போரோ கொலை குற்றவாளி இந்திராணிக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்ட.து.  கடந்த 2012-ம் ஆண்டு இளம் பெண் ஷீனா போரா ,25 ராய்காட் என்ற பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

 அவர் கடத்தி கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மும்பை காவல் துறை  வழக்குப்பதிவு செய்து 2015-ம் ஆண்டு அப்பெண்ணின் தாயார் இந்திராணி முகர்ஜி, இவரது இரண்டாவது கணவர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோரை கைது செய்தனர். மகளை தாயே கடத்தி சென்று கொலை செய்தது தெரியவந்தது. 

இந்திராணி தற்போது மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.சிறையில் உயிருக்கு பாதுகாப்பில்லை எனக்கு பிணை வழங்க வேண்டும் என சி.பி..ஐ நீதிமன்றம்  மனு செய்தார். 

இந்த மனு நீதிபதி ஜக்டாலே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. வழக்கறிஞர் , "இந்தி ராணிக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்று பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி, இந்திராணியின்  பிணை மனுவை தள்ளுபடி செய்தார்.

செய்திகள்
சனி செப்டம்பர் 15, 2018

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

புதன் செப்டம்பர் 12, 2018

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி  இன்று டெல்லியில்  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை