அம்பாந்தோட்டையை பெற்றுக்கொண்ட திருப்தியுடன் நாடு திரும்புகின்றார் சீனத் தூதுவர்

December 18, 2017

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை தனது நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்த திருப்தியுடன் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் நாடு திரும்பவுள்ளார். 

தனது பதவிக்காலம் முடிந்வடைந்த நிலையிலேயே அவர் இன்று (18) நாடு திரும்புகின்றார். 

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு மாதம் கழித்து 2015 பெப்ரவரி 14ஆம் நாள் சிறிலங்காவுக்கான 20 ஆவது சீனத் தூதுவராக யி ஷியான்லியாங் கொழும்பில் பொறுப்பேற்றிருந்தார்.

சுமார் மூன்று ஆண்டுகள் கொழும்பில் பணியாற்றிய அவரது பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் இன்று பீஜிங் திரும்பவுள்ளார்.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் சீன முதலீடுகள் கேள்விக்குறியாக மாறியிருந்த சூழலில் சீனத் தூதுவராகப் பொறுப்பேற்றிருந்த யி ஷியான்லியாங் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா வசப்படுத்தியுள்ள நிலையில் நாடு திரும்புகிறார்.

இவர் பணியாற்றிய காலத்தில் நாட்டின் 9 மாகாணங்களுக்கும் 25 மாவட்டங்களுக்கும் பயணங்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் இருந்து விடைபெறுவது தொடர்பாக விடுத்துள்ள செய்தி ஒன்றில்,

புதிய பட்டுப்பாதை திட்டம் சீன சிறிலங்கா உறவுகளை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள்