அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சகோதரன் போட்டியிடுவார்

செப்டம்பர் 12, 2018

சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் ஒருவர் போட்டியிடுவார் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்குச் சென்றுள்ள அவர், அங்கிருந்து த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அபேட்சகராக வருபவர் தங்களது குடும்பத்தவர் ஒருவரா? அல்லது வேறு ஒருவரைப் பற்றி கருத்தில் கொள்வீர்களா? என த ஹிந்து பத்திரிகை ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

'எனது மகன் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது. ஜனாதிபதி வேட்பாளராக வரும் ஒருவர் இலங்கை சட்டப்படி 35 வயதை அடைந்திருத்தல் வேண்டும். கடந்த காலங்களில் இந்த வயதெல்லை 30 ஆகவே காணப்பட்டது. இதனால், அவருக்கு 2019 இல் வேட்பாளராக வர முடியாது.

ஆனால், எனது சகோதரர் ஒருவர் சந்தேகமின்றி போட்டியிடுவார். இருப்பினும், மக்கள் தேவையை அடிப்படையாக வைத்து யார் என்பதை கட்சியும், கூட்டணியும் தீர்மானம் எடுக்கும் என அவர் மேலும் கூறினார். 

செய்திகள்
வியாழன் செப்டம்பர் 20, 2018

பிமல் ரத்நாயக்க எம்.பியும்  சுமந்திரன் எம்.பியும்  நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு