'அக்., 2 முதல் உண்ணாவிரதம்'!

செப்டம்பர் 08, 2018

லோக்பால் நியமனம், விவசாயிகள் ஓய்வூதியம் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்., 2 முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். ஊழல் வழக்குகளை விரைவாகவும், நேர்மையாகவும் விசாரிக்க, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா நியமனம் செய்வது, விவசாயிகளுக்கு, மாதம், 5,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லியில், மார்ச்சில், அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

இவரது கோரிக்கைகளை நிறைவேற்ற, நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டார்.இந்நிலையில், தன் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாததால், மஹாத்மா காந்தி பிறந்த நாளான, அக்., 2 முதல், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தன் சொந்த ஊரான, ராலேகான் சித்தியில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக, அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

செய்திகள்
சனி செப்டம்பர் 15, 2018

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

புதன் செப்டம்பர் 12, 2018

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி  இன்று டெல்லியில்  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை