நேரடி விமான சேவை ஆரம்பம்

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி நேற்று (09) இரவு 10.10 மணியளவில் எயார் ஏசியா விமானம் AIQ-140 தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்து தாய்லாந்தின் Don Mueang சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அந்த விமானத்தில் இருந்து 134 பயணிகளும் 07 பணியாளர்களும் இலங்கைக்கு வந்திருந்ததுடன், பின்னர் 174 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அந்த விமானம் தாய்லாந்துக்கு புறப்பட்டது.

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்திற்கு 04 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10:00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் இந்த விமானங்கள் தாய்லாந்தில் உள்ள Don Mueang விமான நிலையத்திற்கு இரவு 11:00 மணிக்கு புறப்படும்.

விமானம் 03 மணிநேரம் 15 நிமிடங்கள் பயணிப்பதுடன் வருகை மற்றும் புறப்பாடு ஆகிய இரண்டிற்குமான பயணச்சீட்டு 50,000 ரூபாய் மாத்திரம் என தெரிவிக்கப்படுகிறது.