உயிர் காக்கும் தரவு சரிபார்த்தல்

சமூக வலை­த­ளங்கள்  மற்றும் டிஜிட்டல் கட்­ட­மைப்பு பாரிய வளர்ச்சி அடைந்­தி­ருக்­கின்ற இந்த கால­கட்­டத்தில் போலி செய்­தி­களை பரப்­பாமல் இருப்­பதும் போலி செய்­தி­­களை கண்­டு­பி­டிப்­ப­தற்­கான தரவு சரி பார்த்­­தலை மேற்­கொள்­வதும் எந்­த­ளவு தூரம்  முக்­கி­யத்­து­வ­மிக்­கது என்­பது தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

முக்­கி­யத்­து­வ­மிக்க தரவு சரி­பார்த்தல்  (FactChecking)

தரவு சரி­பார்த்தல் (FactChecking) என்­பது ஒரு உயிர் காக்கும் கரு­வி­யாக இன்­றைய நிலையில் உரு­வா­கி­யி­ருப்­ப­தையும் காண­மு­டி­கி­றது. போலி தக­வல்­களை தவிர்த்து சரி­யான தக­வல்­களை சரி­பார்த்து உண்மை தக­வலை வெளி­யிட்டால் உயர்­களை  பாது­காக்க முடியும் என்­பது நிரூ­ப­ண­மாகி வரு­­­கின்­றது. அந்­த­ள­வு­ தூரம் இன்று இந்த போலி செய்­திகள்   மக்­களின் வாழ்க்­கையை பாதிப்­ப­துடன் மக்­களின் உயிர்­க­ளையே காவு கொள்ளும் ஒரு ஆபத்­தான விட­ய­மாக உரு­வாகி வரு­கி­றது.

எனவே, இங்கு தரவு சரி­­பார்த்­தல் என்­பது மிக முக்­கி­ய­மா­ன­தாக  உரு­­வெ­டுத்து வரு­கின்­றது.  அது   தவிர்க்­கப்­பட முடி­யா­த­தாக   ஊட­க­வியல் செயற்­பா­டு­களில்  காணப்­ப­டு­கின்­றது.

இங்கு முக்­கி­ய­மாக போலி மற்றும் தவ­றான செய்­திகள் பரப்­பப்­ப­டு­வதால் உயி­ரி­ழப்­­புகள், வன்­முறை மற்றும்  அமை­யின்மை ஏற்­ப­டு­கின்­றன என்­ப­தற்கு மணிப்பூர் சம்­ப­வங்­களும் சான்று பகிர்­கின்­றன.

அதிர்ச்சி தக­வல்கள்

இந்­தியாவில் மணிப்­பூரில் இடம்­பெற்ற கல­வ­ரங்­க­ளுக்கு போலி செய்திகளும் காரணம் என்று அதிர்ச்சி தக­வல்கள்  அண்மையில் வெளி­யா­கி­ன. கடந்த மே மாதம் 3ஆம் திகதி முதல் சிறு­பான்மை பழங்­குடி மக்­க­ளான குகி இனத்­த­வர்­க­­ளுக்கும் பெரும்­பான்மை மெய்தே இனத்­த­வர்­க­ளுக்­கி­டையில் ஆரம்­ப­மான வன்­மு­றை­களில் இது­வரை 150 பேருக்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ளனர்.

உல­க­ளா­விய ரீதியில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இந்தக் கொடூர இன வன்­மு­றை­களில் பல­வற்­றுக்கு ஆரம்­பத்தில் இணை­­யத்­த­ளங்கள் மூலமும் பின்னர் உள்­நாட்டு பத்­தி­ரி­கைகள்  மூலமும் பரப்­பப்­பட்ட போலிச் செய்­தி­களும் வதந்­தி­க­ளும்  காரணம் என பிராந்­திய அதி­கா­ரி­களை மேற்­கோள்­காட்டி இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்டிருந்தன.

அதாவது, சுர­சாந்­து­பூ­ரி­லுள்ள பழங்­கு­டி­யி­னத்­த­வர்­களால் படு­கொலை செய்­யப்­­பட்ட  பெண் ஒரு­வ­ரது சடலம் என்ற பொய்­­யான செய்­தி­யுடன் பொலித்­தீனால் சுற்­­றப்­­பட்ட பெண்­ணொ­ரு­வரின்  உடலை வெளிப்­­ப­டுத்தும் புகைப்­படம் இம்பெல் பள்­ளத்­தாக்குப் பிராந்­தி­யத்தில் பரப்­பப்­பட்­ட­தை­ய­டுத்தே மேற்­படி இனக் கல­வ­ர­மா­னது கிளர்ந்­தெ­ழுந்­தது.

எனினும், மேற்­படி கல­வ­ரத்­திற்குக் கார­ண­மான புகைப்­ப­டத்­தி­லுள்ள பெண் சுர­சாந்­து­பூரில் படு­கொலை செய்­யப்­ப­ட­வில்லை எனவும் அவர் டில்­லியில் படு­கொலை செய்­யப்­பட்ட ஒருவர் எனவும் பின்னர் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

போலிப் புகைப்­ப­ட­மா­னது காட்டுத் தீ போல பர­வி­யதால் இந்த வன்­மு­றைகள் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றமை போலி செய்­திகள் எந்­த­ளவு தூரம் மக்­களின் வாழ்க்­கையை பாதிக்­கின்­றன என்­­ப­த­னையும் ஊட­க­வி­யலில் தரவு சரி­பார்த்தல் என்­பது எந்­த­­ளவு தூரம் முக்­கியம் என்­ப­த­னையும் எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

உண்­மை­யான அறிக்­கை­யிடல்

ஊட­க­வி­ய­லா­ளர்கள் செய்­தி­களை தவ­றுகள் இன்­றியும் நம்­ப­க­ர­மா­ன­தா­கவும் அறிக்­கை­யி­ட­வேண்டும். அதிலும் தவ­றான ஒரு தகவல் வெளி­யி­டப்­படும் பட்­சத்தில் அதனை  சரி­பார்த்து மீண்டும் திருத்­து­வ­தற்கு ஒரு­போதும் பின்­வாங்­கக்­கூ­டாது. இன்­­றைய நிலையில் தரவு சரி­பார்த்தல் என்­பது உல­க­ளவில் ஒரு முக்­கி­ய­மான கார­ணி­யாக வளர்ந்து வரு­கின்­றது.

அதா­வது, கவ­லைக்­கு­ரிய விடயம் என்­ன­வென்றால் ஒரு சில சந்­தர்ப்­பங்­களில் தவ­று­த­லாக அறிக்­கை­யிடல் செய்­யப்­ப­டலாம்.  அதனால் தவ­றான செய்தி பரப்­பப்­ப­டலாம்.  அதனை திருத்திக் கொள்­ளலாம்.  ஆனால் சமூக ஊடங்­க­ளிலும் பிர­தான ஊட­கங்­க­ளிலும் சில வேலை­களில் திட்­ட­மி­டப்­பட்டே  போலி­யான செய்­திகள் பரப்­பப்­ப­டு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.  எனவே, தரவு சரி­பார்த்தல் என்­பது  இங்கு மிக முக்­கி­ய­மான  விட­ய­மாக இருக்­கின்­றது.   இல்­லா­விடின் மக்­களின் உயிர்­களை காவு கொள்ளும் அபா­ய­க­ர­மான நிலையை அது உரு­வாக்­கி­விடும்.

பல சந்­தர்ப்­பங்­களில் ஒரு நிறு­வ­னத்தை அல்­லது ஒரு தனி­ந­பரை இலக்­கு­வைத்து  போலி செய்­திகள் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன.  அந்த போலி செய்­தி­களை உட­ன­டி­யாக   தரவு சரி­பார்த்து உண்­மை­யான விட­யத்தை  மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­து­வதே இங்கு பிர­தான விட­ய­மா­க­வுள்­ளது.  சமூ­கத்தில் இனங்­க­ளுக்கு மத்­தியில் வேண்­டு­மென்றே குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும்  நோக்கில் பொய்­யான,  போலி­யான செய்­தி­களை பரப்பும் பட்­சத்தில் அது எவ்­வா­றான விளை­வுகள் ஏற்­படுத்தும் என்­ப­தற்கு மணிப்பூர் இன்று உதா­ர­ண­மாக இருக்­கின்­றது. போலி செய்­திகள் எந்­த­ள­வு­தூரம் ஆபத்­தா­னவை, அபா­ய­க­ர­மா­னது     என்­பதை மணிப்பூர் சம்­ப­வங்கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

எனவே, இங்கு போலி  செய்­தி­களை வெளி­யி­டு­வதை முதலில் தடுக்க வேண்டும். போலி செய்­திகள் வெளி­யாகும் பட்­சத்தில் அவற்றை சரி பார்த்து உண்­மை­யான செய்­தியை வெளி­யி­டு­வ­தற்க ஊட­க­வி­ய­லா­ளர்­கள்   முயற்­சிப்­பது முக்­கி­ய­மாகும்.

சமூ­கங்­களில் அபா­யங்­களை, வன்­முறை­­­களை, பிரச்­சி­னை­களை, அமை­தி­யின்­மையை தடுப்­ப­தற்கு   தரவு சரிப்­பார்த்­தில் மிக முக்­கி­ய­மாக இருக்­கின்­றது. தரவு சரி­பார்த்­த­­லுக்கு பல நாட்கள், பல வாரங்கள், பல வரு­டங்கள் கூட எடுக்­கலாம்.  ஆனால் அந்த செயற்­பாட்டை நிறுத்தி விடக்­கூ­டாது.

கடந்த வருடம் பாகிஸ்­தானில் இலங்­கையர் ஒருவர் எரிக்­கப்­பட்டுக் கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார். அங்கு ஒரு தவ­றான செய்தி பரப்­பப்­பட்­ட­மையே அதற்கு மிக கார­ண­மாக  இருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எவ்­வாறு செய்­வது?  

இங்கு தரவு சரி­பார்த்­தலை ஊட­க­வி­ய­லா­ளர்கள் முன்­னெ­டுப்­ப­தற்கு பல கரு­விகள் சர்­வ­தேச ஊடக கற்கை நிறு­வ­னங்­க­ளினால் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை பயன்­படுத்­தி­னா­லேயே போலி­யான தக­வல்­களை கண்­டு­பி­டித்து உண்மை தக­வல்­களை வெளி­­யிட முடியும்.

தரவு சரி பார்த்தல் செயன்­மு­றைக்­காக ஏழு கரு­விகள் சர்­வ­தேச மட்­டத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.  பொய்ன்டர் என்ற சர்­வ­தேச ஊடக கற்கை நிறு­வனம் இது தொடர்பில்  ஏழு கரு­வி­களை அல்­லது நுட்­பங்­களை உரு­வாக்­கி­யுள்­ளது.

ஏழு கரு­விகள்

அதா­வது பேச்­சா­ளரைத் தொடர்பு கொள்­ளல், (சம்­பந்­தப்­பட்ட தரப்பு)  ஏனைய தரவு சரி­பார்த்தல் மூலங்­களை பார்த்தல்,  உயர்ந்த­மட்ட கூகுள் ஆய்வு, ஆழ­மான இணைய ஆய்வு, பல்­வேறு கண்­ணோட்­டங்­களைக் கொண்ட நிபு­ணர்­களை நாடுதல், புத்­த­கங்­களை ஆராய்தல், வேறு மூலங்­களை பார்த்தல் ஆகிய இந்த ஏழு கரு­வி­களே  தரவு சரி­பார்த்தல் முறைக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.  இவற்றை பயன்­ப­டுத்­தினால் சந்­தே­கத்­துக்­கு­ரிய செய்தி தொடர்பில் உண்­மையை கண்­டு­பி­டிக்­கலாம்.

தற்­போது சகல நாடு­களும் இந்த தரவு சரி பார்த்தல் தொடர்­பாக கவ­னத்தில் செலுத்த வேண்­டிய அவ­சியம் காணப்­ப­டு­கி­றது.    சமூக ஊட­கங்கள் ஆதிக்கம் செலுத்­து­கின்ற இந்த யுகத்தில் தவ­றான செய்­திகள் போலி செய்­திகள் வேண்­டு­மென்றே  உரு­வாக்­கப்­பட்டு பரப்­பப்­ப­டு­கின்­றன.     இதனால் கடு­மை­யான நெருக்­க­டிகள்,  பிரச்­சி­னைகள் அமை­தி­யின்மை,  வன்­முறை போன்­றன நிகழ்­கின்­றன.

நிபு­ணர்­களின் நோக்கு

‘’தவ­றான செய்­திகள் மற்றும் போலி செய்­துகள் மக்­களை மிக வேக­மாக சென்­ற­டை­கின்­றன.  ஆனால் அவற்றை பிழை­நீக்கம் செய்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற திருத்த செயல்­பாடு அந்­த­ளவு தூரம் கவர்ச்­சி­யாக மக்­க­ளிடம் செல்­வ­தில்லை. இவை   ஆழ­மா­கவும் மக்­க­ளிடம் செல்ல வேண்டும்.  அதற்­காக ஆழ­மான முறையில் செயற்­பட வேண்டும்’’  என்று அமெ­ரிக்­காவில் நோர்த் கரோ­லினா மாநி­லத்தில் இந்த   தரவு சரி­பார்த்தல் செயல்­பா­டு­களை தீவி­ர­மாக முன்­னெ­டுத்து வரு­கின்ற மற்றும் பொலி­டிபெக்ட் இணை­ய­த­ளத்தின்  ஸ்தாப­க­ர­மாக  இருக்­கின்ற பேரா­சி­ரியர் பில் அடையர்  கூறு­கிறார்.

ஊடக அறிவு, Media literacy

அது­மட்­டு­மின்றி  ஊடக அறிவும் தெளி­வும் சக­ல­ருக்கும் இருக்க வேண்­டி­யது அவ­­சி­ய­­மா­கின்­றது. ஆங்­கி­லத்தில் Media literacy என்று கூறு­வார்கள்.  அதா­வது ஒரு செய்­தியை புரிந்து கொள்­ளக்­கூ­டிய தன்­மையை இது குறித்து காட்­டு­கி­றது. ஒரு செய்­­தியை பார்த்­த­வுடன் இது உண்­மை­யாக இருக்­குமா? அல்லது பொய்யானதாக இருக்குமா? போலியானதாக இருக்கும் என்­பதை புரிந்து கொள்ளக்கூடிய திற­மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கார­­ணம் நாம் தற்போது தகவல் உலகில் வாழ்கி­றோம். எங்கு பார்த்தாலும் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. ஒரு செய்தி  வெளி­யிடப்படுகின்றது என்பதற்காக அதனை முற்று முழுதாக நம்பவேண்டிய அவசிய­மில்லை. அது தொடர்பாக ஒரு ஆய்வு சகல மட்டத்திலும் இருக்கவேண்டும். அப்­படியானால்  மட்டுமே அதன் பாதிப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா, இலங்கை என பல நாடுகள் இன்று தரவு சரிபார்த்தல் விடயத்தை மிக அதிகமாக முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டன. இந்தி­யாவில் பல நிறுவனங்கள் தற்போது தரவு சரிபார்த்தலை செய்கின்றன. ஆனால் அவற்­றை­யும் தாண்டி அசம்பாவிதங்கள் இடம்­பெறுகின்றன.

தரவு சரிபார்த்தல்,  ஊடக  அறிவு,  போலி செய்திகளை தவிர்த்தல் என்பன தொடர்பாக மிக தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசி­யத்தை தற்போது மணிப்பூர் சம்பவமும் எடுத்­துக் காட்டியிருக்கிறது.

ரொபட் அன்டனி