மொழியும் கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன் தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.

மேலும் படிக்க

எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை, சிருஷ்டிகர்த்தாக்கள் சித்திரித்துக் காட்டவேண்டும்.

மேலும் படிக்க

இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களைச் சிருஷ்டிக்க வேண்டும். இந்தப் படைப்புக்கள் எமது புனித விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டுவதாக அமைய வேண்;டும், சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமைய வேண்டும்.

மேலும் படிக்க

கலை இலக்கியப் படைப்புகள் மக்களைச் சிந்திக்கத்தூண்டவேண்டும் பழமையிலும் – பொய்மையிலும், பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப் பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும்; மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

மேலும் படிக்க