தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவாக நடாத்தப்படும் தேசத்தின் குயில்கள் 2014!டென்மார்க்கில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவாக நடாத்தப்படும் தேசத்தின் குயில்கள் 2014 எழுச்சி பாடல் போட்டியானது Ikast நகரில் 06.09.2014 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
சிறீலங்காவில் பெண்களுக்கு ஆபாச வார்த்தை குறுந்தகவல் அனுப்பியவர் கைது! பெண்களின் அலைபேசிகளுக்கு ஆபாச வார்த்தைகளிலான குறுந்தகவல்அனுப்பிய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று மஹவ காவல்துறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது
யாழில் மூடப்பட்டிருந்த பனைவெல்ல உற்பத்தி நிலையத்தை மீண்டும் திறக்க மன்று அனுமதி! மனித பாவனைக்கு உதவாத உரம் கலந்த பனைவெல்லம் தயாரித்தமை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டிருந்த ஊர்காவற்றுறை பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பனைவெல்ல உற்பத்தி நிலையத்தியத்தை
தமிழகம் திருச்சியில் ஈழத்தமிழ் அகதி குத்திக்கொலை!தமிழகத்தில் ஈழத்தமிழர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தின் திருச்சி கருமண்டபம் செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வேந்திரன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழில் படையினரின்  வாகனம் மோதி வயோதிபர் படுகாயம்!யாழ்ப்பாணம், பண்ணை வீதியில் படை வாகனம் மோதியதில் உந்துருளியில் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் நாளை  குரு உத்சவ்  என மாற்றுவதற்கு தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்களது பிறந்த நாளான செப்டம்பர் -5 ஆசிரியர் நாளாக அனைத்துப் பள்ளிகளிலும் கடைபிடிக்கப் பட்டுவருகிறது.
மன்னாரில் தனிநாயகம் அடிகளாரின் 34 ஆவது வருட நினைவு நிகழ்வுதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் இறையடி சேர்ந்து 34 ஆவது வருட நினைவு தினமாகிய இன்று மன்னாரில் அடிகளாரின் நினைவு தின நிகழ்வுகள் இடம் பெற்றது....
மறுமலர்ச்சி தி.மு.கழக உயர்நிலைக்குழுக் கூட்டத் தீர்மானங்கள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....
ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜமமு தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் சந்திப்புஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜமமு தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில், ரணில் விக்கிரமசிங்கவின் ஐந்தாம் ஒழுங்கை பிரத்தியேக இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு...
ஐ.நா. மனித உரிமை குழுவினருக்கு இந்தியாவுக்குள் நுழைய விசா வழங்க கோரி போராட்டம்இந்தியாவில் அகதிகளாக தங்கி இருக்கும் இலங்கை தமிழர்களிடம் விசாரணை நடத்தும் வகையில், ஐ.நா. மனித உரிமை குழுவினருக்கு இந்தியாவுக்குள் நுழைய விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....
இலங்கை முஸ்லிம்கள் அராபிய கலாசாரத்தை பின்பற்றத் தேவையில்லைஇலங்கை முஸ்லிம்கள் அராபிய கலாசாரத்தை பின்பற்றி உடை அணிவது நாட்டில் சமூகங்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது என்று தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்து.....
ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே எதிர்வரும் 7ஆம் திகதி சிறீலங்கா விஜயம் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக எதிர்வரும் 7ஆம் திகதி சிறீலங்கா விஜயம் மேற்கொள்ளவுள்ளார்...
பெரும்பான்மையினரின் பேரூந்துகள் அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடுகின்றனகொழும்பிலிருந்து வடக்கு, கிழக்குக்கு அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பயணிகள் பேரூந்துகள் குறித்து கண்காணிக்கும் நடவடிக்கையொன்று கொழும்பு போக்குவரத்து பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.....
மருத்துவ ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் 48 மணி நேரத்திற்கு இடை நிறுத்தம்ஐந்து நாட்களாக முன்னெடுத்து வந்த நிறைவு காண் மருத்துவ ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் 48 மணி நேரத்திற்கு இடை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை சுகாதார அமைச்சருடனான விசேட பேச்சுவார்த்தையின் பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில்....
சிறீலங்காவில் பௌத்த பயங்கரவாதம் கிடையாதாம் - பொதுபல சேனாபௌத்தர்கள் அஹிம்சையை கடைப்பிடிப்பவர்கள். பயங்கரவாதிகள் அல்ல என்பதை ஐ.நா. செயலாளர் புரிந்து கொள்ள வேண்டும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்....
வடமாகாண சபையை செயற்படவிடாது அரசாங்கம் தடுத்து வருகின்றது - மோடிக்கு கடிதம்அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிக்ஞைகளை காண்பித்தபோதிலும் வடமாகாண சபையின் செயற்பாட்டிற்கு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இதனால் வடமாகாண சபை உரிய முறையில் செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது....
படையினர் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்?மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் அச்சுறுத்தும் படையினர் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கலந்துகொண்டுள்ளமை தழிம் சமூகத்தையும் கல்வி சமூகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.....
சிறீலங்காவில் வல்லப்பட்டையுடன் சீனப்பிரஜை கைது! ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 13 கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் சீனப்பிரஜை ஒருவரை கைது செய்துள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.
யாழில் கத்திக்குத்திற்கு இலக்கானவா் படுகாயம்!கத்தி குத்துக்கு இலக்காகிய குடும்பஸ்தர் ஒருவா் குடல் வெளியில் வந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் பாடசாலை அதிபர்கள் ரி.ஜ.டியினரால் விசாரணை! கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அதிபர்கள் மூவர் நேற்றுமுன்தினம் கந்தசாமி ஆலயதிற்கு அருகில் உள்ள பயங்கரவத தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
வவுனியாவில் முகப்புத்தகத்தை இயக்கிய இளைஞன் கைது!கடந்த சில மாதங்களாக ‘வவுனியா பொடியன் என்ற பெயரில் முகப்புத்தக கணக்கொன்றை இயக்கிவந்ததாகக் கூறப்படும் 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று இரவு கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 ஐ.நா.வில் சிறீலங்காவுக்கு எதிராக ஏற்படும் அதிர்வலையின் பிரதிபலிப்பு புலிகள் உருவாக்கம்  இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கூட்டுச் சேர்ந்தே இதுபோன்ற கட்டுக்கதைகளை வெளியிட்டு வருகிறது. புலிகள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்கிறார்கள் என்றும்...
ஐ.நா சபையில் மோடியை சந்திக்கவுள்ள மகிந்த!ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வு நடைபெறும் போது சிறீலங்கா ஜனாதிபதி, இந்திய பிரதமரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவின் கிழக்கு பகுதியில் தொடரும் கனிய மணல் அகழ்வு!கொக்கிளாய் - முகத்துவாரம் ஆற்றுப்படுகையில் இடம்பெற்றுவந்த சட்டவிரோத இல்மனைட் கனிய மணல் அகழ்வு அதிகாரைிகளின் தலையீட்டையடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.தற்போது மீண்டும் மணல் அகழ்வு நடவடிக்கை தொடர்கின்றது.
சிறீலங்கா தொடர்பில் இந்தியாவிடம் தெளிவு படுத்தவேண்டிய தேவை இல்லை -சுரேஸ்! சிறீலங்கா அரசாங்கம் பற்றி இந்தியாவிடம் தெளிவு படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் புகையிரத கடவை இன்மையால் மக்கள் அச்சம்! வடக்கிற்கு புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல இடங்களில் புகையிரத கடவை இல்லாததினால் பல விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவில் ஆசிரியர் தினம் பெயர் மாற்றம் வைகோ கண்டனம்!ஆசிரியர் தினத்தின் பெயரை “குருஉத்சவ்” என்று பெயர் மாற்றிக் கொண்டாட அறிவிப்பு வெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.
மகிந்த மற்றும் மாலைதீவு ஜனாதிபதியின் பாக்கிஸ்தான் பயணங்கள் ரத்து!மகிந்தறாஜபக்ச மற்றும் மாலைதீவு ஜனாதி பதிஆகியோர் பாக்கிஸ்தானிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பாக்கிஸ்தானில் நிலவும் அமைதியின்னை காரணமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நவாஸ் ஸரீப் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூதூரில் காவல்துறையினரின் அடாவடி! திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட அடாவடி நடவடிக்கைகள் இரகசியக் கமெரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜந்து ஆண்டுகளா எந்தவொரு வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லையாம் -பீரிஸ்!நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ளபோதும் எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறவில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பிரான்ஸின் மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா சிறப்புற நடைபெற்றுள்ளது!பிரான்சின் லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள மாணிக்க பிள்ளையார் ஆலயவருடாந்த தேர் திருவிழா 31.08.2014 இன்று ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெரும்திரளான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்து இருந்தது.
பிரான்சில் தொடரும் லைக்காவுக்கெதிரான போராட்டம்நேற்று மாணிக்க விநாயகரின் தோ்பவனியின் போது மகிந்தவின் கைக்கூலி நிறுவனமான லைக்காவின் நடைபாதைக் கடைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபடும் இளையவர்கள் தொடர்பான காணொளிப்பதிவிது.
நல்லூர் பிரதேச சபையின் திட்டமிடலற்ற நடவடிக்கையால் சிறிலங்கா படையினர் தலையீடுநல்லூர் பிரதேச சபையின் திட்டமிடலற்ற நடவடிக்கையால் அந்தப் பிரதேச சபையின் செயற்பாடுகளில் சிறிலங்கா படையினர் தலையிடக்கூடிய நிலமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் குப்பை...
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐநா நோக்கிய நீதிக்கான ஈருறுளிப்பயணம் - இனமான இயக்குனர் கௌதமன் அழைப்பு மாவீரர்களின் தியாகம் வீண்போகாது .தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருறுளிப்பயணம் எதிர்வரும் புதன்கிழமை 3.09.2014 அன்று மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்க இருக்கும் நிலையில், ஐரோப்பிய தமிழ் மக்கள் இப் பயணத்தை...
முகத்திரை கிழித்தெறியப்பட வேண்டிய நாசகாரிகள்கடந்த 15.08.2014 அன்று சங்கதி-24 இணையம் மீது நாசகாரிகளால் இணையவழித் துடைத்தழிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்கதி-24 இணையத்தின் பரிமாறியில் (சேர்வர்) இருந்த ஆவணங்கள் உட்பட அனைத்து...
பிரித்தானிய பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் சிறீலங்கா அதிகாரிகள் விசாரணை!சிறீலங்கா குடிவரவு-குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில், சிறீலங்கா படையினர் தொடர்பான தகவல்களை சேகரிக்க முயன்ற இந்தியரான- பிரித்தானிய பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
வடக்கில் கடும் காற்றினால் மக்கள் பாதிப்பு!யாழ். மாவட்டத்திலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக வீசி வருகின்ற கடும் காற்று காரணமாக மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் உள்ளவர்கள் கண்தானம் செய்ய முன்வரவேண்டும்!தமிழர் தாயகத்தில் உள்ளவர்கள் கண்தானம் செய்ய முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கலாநிதி மு.மலரவன், கண் தானம் மிகவும் உன்னதமான செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆங்சான் சூகீயை சந்தித்த சந்திரிக்கா!முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மியன்மாரின் நோபல் பரிசு பெற்ற ஜனநாயகப் போராட்டத் தலைவி ஆங் சான் சூகீயை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
யாழில் இடம்பெற்ற விபத்தில் மருத்துவர் காயம்! யாழ் தொண்டைமானாறு அச்சுவேலி வீதியில் பிக்கப் வாகனமும் சிற்றூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் வைத்தியர் ஒருவர் காயமடைந்து அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளை திசைதிருப்ப -ஈ.பி.டி.பி கடும் பிரயத்தனம்!ஊர்காவற்றுறை பனைதென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்திற்கு எதிரான வழக்கு விசாரணைகளை திசைதிருப்புவதற்கு டக்களஸ் தேவானந்தா மற்றும் அவருடைய அடிவருடிகளள் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லையில் காணாமல் போனோரின் பிள்ளைகளுக்கு கல்வி சார் பொருட்கள் வழங்கல்!எழுவோம் தமிழா அறக்கட்டளையின் ஊடாக முல்லைத்தீவில் காணாமல் போனோரின் பிள்ளைகளின் கல்விவளர்ச்சிக்கான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்.
கூட்டமைப்பின் இந்திய பயணமும் முரண்பட்ட அறிக்கைகளும்! “ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு” என்று மோடி கூறியதை, ஏதோ “ஈழம் அமைத்து தருவதாக” மோடி கூறியது போல ஊடகங்களுக்கும், மக்களுக்கும் கூட்டமைப்பினர் காட்ட முயன்றிருந்தனர்.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசு,தனியார் துறை சார்பில் பதவி பெறுவதை தடைசெய்ய வேண்டும்! உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணி ஓய்வுக்கு பிறகு அரசு மற்றும் தனியார் துறை சார்பில் பதவி பெறுவதை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா பேரணியில் உலகத்தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் - கி.வீரலட்சுமி!2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற மாபெரும் இன அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமை மன்றத்துக்கு முன்னர் உலகத்தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என தமிழர் முன்னேற்ற படை இயக்கதின் சார்பாக கி.வீரலட்சுமி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறீலங்கா, மியன்மார் நாடுகளில் பௌத்த தீவிரவாதம் பான்கீமூன் கவலை!சிறீலங்கா மற்றும் மியன்மார் நாடுகளில் பௌத்த மத சமூகம் ஏனைய மத குழுக்களுக்கு தீவிர மத உணர்வை ஏற்படுத்தி வருகின்றமை கவலையளிக்கின்றது என்று பான்கீமூன் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவின் பண்டாரவளையில் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி-பெண்ணின் உடலம் மீட்பு! சிறீலங்காவின் பண்டாரவளையில் ஆற்றுக்கு குளிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உறவினர்களுடன் குளிக்க சென்ற போது நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தென்மராட்சி ஆலயங்களில் மிருக பலியை நிறுத்துமாறு கோரி போராட்டம்! தென்மராட்சியிலுள்ள சைவ ஆலயங்களில் மிருகபலியிடல் வழிபாடு மீள ஆரம்பிக்கப் பட்டிருக்கும் நிலையில் இந்த வழிபாட்டு முறையை நிறுத்துமாறு கோரி அறவழிப் போராட்டம் தொடங்கியுள்ளது.
கிளிநொச்சியில் நீராட்டு விழாவில் கைகலப்பு இருவர் படுகாயம்!கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் சிறுமியொருவரின் பூப்புனித நீராட்டுவிழாவின் இடையில் திடீரென இருதரப்பிற்கிடையில் ஏற்பட்ட தர்க்கம், கைகலப்பாக மாறியது. பூப்புனித நீராட்டுவிழா சண்டை களமாக மாறியதில் இருவர் காயமடைந்தனர்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி தோ்தல்!சிறீலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி அரசியல் சாசனத்திற்கமைய நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் முதன்முறையாக விநாயகர் சிலை கடலில் கரைப்பு!ஆவணிச் சதுர்த்தியைக் கொண்டாடும் முகமாக கோண்டாவில் கிழக்கு சபரிமலை ஐயப்பன் ஆலயத்திலிருந்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கீரிமலைக் கடலில் கரைக்கப்பட்டது.
 முல்­லைத்­தீவு நகரின் மத்­தியில் பண்டாரவன்னியனுக்கு சிலை அமைக்க வேண்டும் து.ரவி­கரன்!வன்­னியை இறு­தி­யாக ஆண்ட தமிழ் மன்­ன­ரான பண்­டா­ர­வன்­னி­ய­னுக்கு முல்­லைத்­தீவு நகரின் மத்­தியில் சிலை அமைக்க வேண்டும் என வட­மா­காண சபை உறுப்­பினர் து.ரவி­கரன் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.
முருகபெருமான் பக்தர்களுக்கு அரோகரா...மகிந்த!நல்லுர் கோவில் திருவிழாவிற்கு செல்லும் மக்களுக்கு மகிந்த அரைகுறை தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்(காணொளி)
யாழில் தமிழில் சித்திபெற்ற படையினருக்கு சான்றிதழ்கள்!யாழ். பாதுகாப்புப் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒரு மாதகால தமிழ் மொழி கற்கும் பயிற்சி நெறியில் சித்தி பெற்ற 1633 படையினருக்கான சான்றிதழ்கள் காங்கேசன்துறையில் அமைந்துள்ள தல்சேவன விருந்தினம் விடுதியில் வைத்து கடந்த வெள்ளி இரவு வழங்கப்பட்டன.
தமிழகம் மன்னார் குடியில் நடைபெற்ற செங்கொடியின் வீரவணக்க நிகழ்வு!தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வீரமங்கை செங்கொடியின் மூன்றாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
யாழ் சங்கானை மக்கள் வங்கியில் ஒரேயோரு காசாளர்! யாழ்ப்பாணம் சங்கானையிலுள்ள மக்கள் வங்கியில் பெரும்பாலான வேலைகளில் ஒரேயொரு காசாளர் மட்டுமே பணியில் இருந்து சேவையாற்றுகின்றார்.
த.தே. கூட்டமைப்பு முழுப் பூசணியை சோற்றில் மறைத்து  பொய்யுரைத்தது - சம்பிக்க ரணவக்க!இந்தியாவிற்கு விஜயம் செய்து அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது சந்திப்பு தொடர்பாக இன்றுவரை ஊடகங்களுக்குத் தெரிவித்துவரும் கருத்துக்கள், பேட்டிகள் அனைத்துமே...
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம்-2014!தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரனையுடன் ஈழத்தமிழர் விளையாட்டு சம்மேளனம் நடத்தும் மாவீரர் நனைவு சுமந்த உதைபந்தாட்ட போட்டி எதிர்வரும் 7ஆம் நாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களக் குடியேற்றத்தினால் சிதைக்கப்படும் பாற்பண்ணைத் தொழிலாளர்களின் வாழ்வு  மட்டக்களப்பு மாவட்டத்தில் பாற்பண்ணைத் தொழிலை முற்றுமுழுதாக அழித்து மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களை தொடர்ந்தும் வறுமைக்கோட்டின் கீழ் வைத்திருக்க சிங்கள பேரினவாத சக்திகள் முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன.
இந்தியாவில் பிறந்தோருக்கு சிறீலங்கா பிரஜா உரிமை பெற 25000 ரூபா கப்பம்இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சென்று பின்னர் நாடு திரும்பியுள்ள குடும்பங்களில், இந்தியாவில் பிறந்த 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறீலங்கா பிரஜா உரிமை பெறுவதற்கு அபராதமாக...
நீ அழைத்து வந்தவர்தான் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன்!நீ அழைத்து வந்தவர்தான் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன். இது கேட்ட பின்னர்தான், எனக்கு அச்ச உணர்வே வந்தது. இன்று வரை தலைவனை தொட்டு அழைத்த ஒரு காவல் அதிகாரி என்னும் சிறப்பு திரு.நந்தகுமார்...
பிசுபிசுக்கும் சிறீலங்காவின் மீள்குடியேற்ற நாடகம்சிறீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் பல கொடுக்கும் வகையில் ஜக்கிய நாடுகளின் விசாரணை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையினை கண்டு பயம் கொள்ளும் இந்த அரசாங்கம்...
விடுதலைக்காக சிறகடிக்கும் புலத்துக்குயில்நோர்வே மண்ணில் பிறந்து வளர்ந்து அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் தமிழ்பயின்று தமிழ் இனத்தின் விடுதலைக்காக விடுதலைப்பண்ணெடுத்து பாடிவருகின்றார் இளம் குயில் நிதுலா ஞானச்சந்திரன்.
பிரான்சில் லைக்காவின் விளம்பரக் கொட்டகைகள் அடித்து நொருக்கப்பட்டன - பணியாளர்கள் தப்பியோட்டம்(படங்கள் இணைப்பு) பிரான்சு தலைநகர் பரிஸ் 10ல், தமிழர்களின் வியாபார மையமாக திகழும் லாச்சப்பல் பகுதியில் லைக்காவின் நடைபாதைக் கடைகள் மற்றும் விளம்பரக்கொட்டகைகள் இனந்தொியாத நபர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளே ஜிகாதிகளின் அடுத்த இலக்கு: சவுதி மன்னர் எச்சரிக்கைஐ.எஸ்.ஐ.எஸ்-ஸை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சிரியா, இராக்கை அடுத்து, அவர்களின் இலக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தான் என்று சவுதி மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
மாற்று அரசியலை கட்டி எழுப்ப நாம் தமிழர் கட்சி 2016 தேர்தலில் தனித்துப் போட்டி- சீமான்காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் அண்மையில் நடந்த அக்கட்சி கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சூட்சிக்கே இராணுவ ஆட்சேர்ப்பு!  - கந்தரதன் தாயகத்தில் சிறீலங்கா இனவாதப் படைகளில் தமிழ் இளைஞர், யுவதிகளை திட்டமிட்டுப் பழிவாங்குவதை நோக்காகக் கொண்டு அவர்களை படையில் இணைத்து வருகின்றனர். இவை தொடர்பாக இப்பகுதியில் பலதடவைகள் குறிப்பிட்டிருந்த...
கத்தி புலிப்பார்வை திரைப்படத்தை தடை செய் - தமிழ்நாட்டில் சுவரொட்டிகள்2 லட்சம் அப்பாவி தமிழர்களின் இரத்தம் குடித்த கொடூரன் ராஜபக்சேயின் LYCA திரைப்பட நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்தை தடை செய் என இனம் காக்கும் வீரத்தமிழர்கள்...
கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை இந்திய பிரதமர் மோடி நிராகரித்தார் - திவயின கூறுகின்றது13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கத்தை சிறீலங்கா அரசாங்கத்தின் ஊடாக பெற்றுத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த கோரிக்கையை சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஒருமணி நேரம் ஒதுக்கி மோடி பேசினார், அக்கறையுடன்கேட்டார் என விவரணைகளின் உச்சம் தாங்கமுடியவில்லை – திருமுருகன் காந்திசிறீலங்கா மற்றும் இந்திய அரசுகளின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்கிவரும் திரு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையின் கபடத்தனம் குறித்து தமிழகத்தை தளமாகக் கொண்ட...
தமிழர்களின் வீரத்தை சிங்களப் புலனாய்வுத்துறையால் அத்தனை இலகுவில் உடைத்தெறிந்துவிட முடியாது தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சி இல்லாமற்போன பின்னர் தமிழ் மக்களில் அக்கறையில்லாத ஆட்சி தலைதூக்கியுள்ளது. இதனால் தமிழர் பிரதேசத்தில் கொலைகள், கொள்ளைகள், பெண்களுக்கெதிரான வன்முறைகள்...
தமக்குத் தாமே தண்டனை வழங்கும் விசித்திர மனிதர்கள் சிறீலங்காவில்!உலகத்தில் எங்கும் இல்லாத விசித்திரச் சம்பவங்கள் சிறீலங்காவில்தான் நடக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இனப்படுகொலை செய்த சிறீலங்கா ஆட்சியாளர்களிடமே உலகில் யாருக்கும் வழங்காத நீதிபதிக்கான...
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் தனிநாயகம் அடிகளார் நினைவு நிகழ்வுதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் இறையடி சேர்ந்த நினைவு தினமாகிய செப்டெம்பர் 1ஆம் திகதி திங்கட்கிழமை (01-09-2014) காலை 10.00 மணிக்கு மன்னாரில் அடிகளாரின் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடாகி உள்ளது.
பளையில் வெற்றுக் காணியில் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்புகிளிநொச்சி பளைப் பகுதியில் உள்ள பிரதேச வைத்திய சாலைக்கு பின்புறமாக உள்ள வெற்றுக் காணியில் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை மீட்கப்பட்ட கைக்குண்டுகளில் 3 குண்டுகள் முழுமையாக...
வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் போனோரின் பேரணி!வவுனியாலில் காணாமல் போனோரின் உறவுகளும் சமூக அமைப்புக்களும் இணைந்து முன்னெடுத்த காணாமல் போனோரைக் கண்டறிதல் தொடர்பிலான பேரணிக்கு காவல்துறையினர் இடையூறு ஏற்படுத்தியுள்ளார்கள் (காணொளி)
கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி சிறுமி உள்ளிட்ட மூன்று பெண்கள் பலி!கிளிநொச்சி செல்வா நகர் கந்தன் குளத்தில் குளிக்க சென்ற சிறுமி மற்றும் இரண்டு யுவதிகள் சேற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களுக்கு தீர்வு பெறமுடியாத இந்தியா ஈழத் தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுத் தருமா?பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க இந்திய இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த வாரம் எச்சரித்திருக்கின்றார்.
மன்னாரில் 'தேவ அழைத்தல்' எனும் கருப்பொருளில் கண்காட்சி! மன்னார் மடுமாதா சிறிய குருமடம் ஸ்தாபிக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு “தேவ அழைத்தல்' எனும் கருப்பொருளில் கண்காட்சி இன்று மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் ஆரம்பமானது.
காலியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி! சிறீலங்காவின் காலி, பெந்தர பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த நபர் மோதுண்டதாக..
இயந்திரங்களின் இரும்புப் பகுதிகள் வெட்டிக் கடத்தப்படுகின்றமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்காங்கேசன்துறை சிமெந்து உற்பத்தித் தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களின் இரும்புப் பகுதிகள் வெட்டிக் கடத்தப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.....
கிளியில் கொள்ளையர் அட்டகாசம் - வாள்வெட்டில் ஒருவர் காயம்! வட்டக்கச்சி பகுதியிலுள்ள வீடொன்றில் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக ஏற்பாடுகளை முடித்துக்கொண்டு அனைவரும் உறங்கிய பின் உறவினர் ஒருவர் இயற்கை கடனைக் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியில் சென்றுள்ளார்.
காணாமல் போனோரை கண்டுபிடிக்க வலுவான பொறிமுறை அவசியம்!சிறீலங்கா அரசாங்கம் பல வருடங்களாக பொறுப்புக் கூறல் விடயத்தில் தாமதப்படுத்தும் தந்திரோபாயங்களைப் பின்பற்றி வருகிறது. அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதற்கும் தவறியுள்ளது.
வவுனியாவில் காணாமல் போனவர்களின் பேரணி காவல்துறையால் தடுத்து நிறுத்தம்!காணாமற்போனோர் நாளான இன்று பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று வவுனியாவில் நடத்தப்பட்டது. வவுனியா மாவட்டச் செயலகம் நோக்கிச் சென்றவர்களை கலகம் அடக்கும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
 ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க மறுப்பது மட்டுமின்றி இந்தியாவை அவமதிக்கும் செயலும் ஆகும்தமிழர் வாழ்வுரிமை பிரச்சினையில், அவர்களுக்கு சிங்கள அரசு தானாகவே அதிகாரம் வழங்கும் என்று இந்தியா நம்பிக் கொண்டிருக்கப் போகிறதா? அல்லது வேறு வழிகளில் ஈழத்தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றப் போகிறதா?...
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் 200 பவுண் நகையும் வெளிநாட்டு நாணயங்களும் கொள்ளை யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 200 பவுண் நகையும் வெளிநாட்டு நாணயங்கள் உட்பட பெருந்தொகை பணம் களவு போயுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்....
நீர் நிறைத்து வைக்கப்பட்டிருந்த வாளியில் தலை கீழாக விழுந்து குழந்தை மரணம்மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஐயங்கேனி தமிழ் பிரிவில் நேற்று மாலை திருமால் பவித்திரன் என்ற பதினெட்டு மாத ஆண் குழந்தை ,தனது வீட்டு குளியலறையில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த....
மட்டக்களப்பு தியாவட்டுவான் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம்  மீட்புவாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தியாவட்டுவான் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.....
157 புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில்12 மில்லியன் டொலர் நஷ்டம்அவுஸ்ரேலியா அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் ஒவ்வொரு தடவையும் சட்டத்தை மாற்றும் போது 12.02 மில்லியன் டொலர்களை வீண் விரயம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
அபிவிருத்தி திட்டங்களை அரச தரப்பினர் தமது பொக்கற் பணத்தில் செய்யவில்லைவடக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கிறோம் என்று அரச தரப்பினர் கொக்கரிக்கின்றனர். அவர்கள் தமது பொக்கற்றுக்குள் இருந்து காசை எடுத்து எங்களுக்கு தரவில்லை.....
கனடா மொன்றியல் வணிகர்களின் உதவியில் மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கல்!கனடா மொன்றியல் மாநிலம் விக்ரோறியாறோட் மொன்றியல் வர்த்தகர்களின் உதவியில் மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள் வடமராட்சி கிழக்கு மாணவர்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் வழங்கிவைத்துள்ளார்.
13ஆவது திருத்தத்தில் இருந்து விமோசனம் பெற புதிய அரசியலமைப்பு  உருவாக்க வேண்டும்!இந்தியாவின் 13 ஆவது திருத்தம் என்ற அழுத்தத்திலிருந்து விமோ­சனம்பெற சிறீலங்கா புதிய அரசி­யலமைப்பை உருவாக்க வேண்டும் என்று தேப்பற்றுள்ள தேசிய இயகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் குளவிகொட்டி ஒருவர் பலி!சிறீலங்காவின் தென்பகுதியான பத்தனை பகுதியில் கோவிலுக்கு சென்றவர்கள் மீது குளவி கொட்டியதில் 8 தோட்ட தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தன் நாடு திரும்பிய பின்னர் இந்தியப் பிரதமரின் அழைப்பு குறித்து பேச்சு நடத்தப்படும்!இந்திய பிரதமர் மோடியின் அழைப்புகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தன் நாடு திரும்பிய பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கப்படும் என்று வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவின் அபிசாவளையில் மகளை பாலியல் செய்து புதைத்த தந்தை! எட்டு வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீட்டுக்கு உள்ளேயே புதைத்த தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அவிசாவளை உயர் நீதிமன்ற நீதவான் தேவிகா அபேரட்ன இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.
 யாழில் ரி.ஜ.டி யினரால் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!சீ-4 வெடிமருந்தை தம்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபருக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் வழிபாட்டை மேற்கொண்ட காணாமல் போனோர்களின் உறவினர்கள்!காணாமல்போன உறவுகளை கண்டுபிடிக்கக் கோரி அவர்களின் உறவுகளினால் மன்னார் திருக்கேதீஸ்வரம் கோவிலில் தீபங்கள் ஏற்றி தேங்காய் அடித்து விசேட பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
சிறீலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் விமான போக்குவரத்து அதிகரிப்பு!சிறீலங்காவில் இருந்து சீனாவிற்கான விமானப் பயணங்கள் அதிகரிக்பப்பட உள்ளதாக சிறீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் தி.முத்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட இருவர் கைது! சிறீலங்காவில் இருந்து இந்தியாவிற்கு தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முற்பட்ட இருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவின் காலியில் கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!சிறீலங்காவின் காலி உடுகம ஹோமகலவத்த தோட்ட பங்களாவில் தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இருவருக்கு காலி மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சிங்கள பெண் மரணத்தில் சந்தேகம் அவுஸ்திரேலிய காவல்துறை  விசாரணை! அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பகுதியில் சிறீலங்கா பெண் ஒருவர் வாவி ஒன்றில் மூழ்கி மரணமாகிய சம்பவம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவுஸ்திரேலியா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முகத்திரை கிழித்தெறியப்பட வேண்டிய நாசகாரிகள்

கடந்த 15.08.2014 அன்று சங்கதி-24 இணையம் மீது நாசகாரிகளால் இணையவழித் துடைத்தழிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்கதி-24 இணையத்தின் பரிமாறியில் (சேர்வர்) இருந்த ஆவணங்கள் உட்பட அனைத்து மென்பொருட்களும்...

மேலும்...

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐநா நோக்கிய நீதிக்கான ஈருறுளிப்பயணம் - இனமான இயக்குனர் கௌதமன் அழைப்பு

மாவீரர்களின் தியாகம் வீண்போகாது .தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருறுளிப்பயணம் எதிர்வரும் புதன்கிழமை 3.09.2014 அன்று மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்க இருக்கும் நிலையில், ஐரோப்பிய தமிழ் மக்கள் இப் பயணத்தை...

மேலும்...

தமிழக மீனவர்களுக்கு தீர்வு பெறமுடியாத இந்தியா ஈழத் தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுத் தருமா?

பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க இந்திய இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த வாரம் எச்சரித்திருக்கின்றார்.

மேலும்...

தன் வாயால் கெடும் தவளை - கலாநிதி சேரமான்

அமெரிக்கத் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படும் ‘பிறிசிம்’ காலாண்டு பாதுகாப்பு ஆய்விதழின் ஆவணி மாதப் பிரசுரத்தில் ‘சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு’ என்ற மகுடத்தின்...

மேலும்...

எழுவைதீவின் இறங்குதுறை மோசமான சேதம்: மக்களின் போக்குவரத்துக்கள் பாதிப்பு

எழுவைதீவு பிரதான இறங்குதுறை மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது. கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத நிலையிலுள்ள இந்த துறைமுகத்தை புனரமைப்பதற்கு இதுவரை எவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்று...

மேலும்...

விடுதலைக்கான குரலை முடக்க முயலும் முகம்தெரியாத சக்திகள் - ச.ச.முத்து

ஊடகங்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தின் வீரியமிக்க குரல்கள். அடக்குமுறையாளனின் கொடூரங்கள், விடுதலைக்கு போராடும் அமைப்பின் செய்திகள், அறைகூவல்கள் என்பனவற்றை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பிக்கும் தளங்கள்தான் ஊடகங்கள்.

மேலும்...


குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலைநிமிர்த்தி - தன்மானத்துடன் - வாழவைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.

- தேசியத்லைவர் மேதகு வே.பிரபாகரன்